திரு.ராமச்சந்திரன் சார் இந்த தளத்தில் பல பாடல்களை பாடியது பதியப்பட்டுள்ளது மிகவும் சர்வ சாதரணமாக இனிமையாக பாடியது இந்த ஆயர்பாடி மாளிகையில் பாலுஜியின் அற்புதமான பாடல். அற்புதமான முயற்சி. வாழ்த்துக்கள் ராமசந்திரன் சார்.
கேட்டு மகிழ்ந்து ராமகிருஷ்னன் சாருக்கு உற்சாகத்தை ஏற்படுத்துங்கள் அன்பர்களே.
பாலுஜி ரசிகர்கள் சந்திப்பு - சென்னை >> அழைப்பிதழ் உதவி >> திரு.விகாஸ், மும்பை
டாக்டர் எஸ்.பி.பி ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் வருடாந்திர சந்திப்பு சென்ற 21ஆம் தேதி சுட்டெரிக்கும் இளவெயில் ஞாயிறு அன்று டாக்டர் பாலுஜி அவர்களின் ஒலிப்பதிவு கூடமான கோதண்டபானி ஆடியோ பதிவு கூடத்தில் அமர்க்களமாக நடைப்பெற்றது.
பாலுஜி சந்திப்பு படம் உதவி >> திருமதி.கீதா நாராயாணன் கோவை (விரைவில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இங்கே பின்னர் சேர்க்கப்படும்)
காலை 9 மணியில் இருந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு பெங்களூர்,ஆந்திரா, திருச்சி,பாண்டிசேரி,கோவை பல ஊர்களில் இருந்து குவிய தொடங்கிவிட்டார்கள். நானும் கோவை கோபாலகிருஷ்னன் மற்றும் திருமதி. கீதா நாராயனன் அவர்களும் குடும்பத்துடன் 10.30க்கு தான் உள்ளே நுழைந்தோம் என்பது வேறு விஷயம். 10 மணி துவங்கும் என்று நிகழ்ச்சி நிரலில் தெரிவித்து இருந்தார்கள் பவுண்டேசன் அமைப்பாளர்கள். நேரம் நெருங்க நெருங்க சில்லென்ற குளிரூட்டப்பட்ட ஏசி ஒலிப்பதிவு கூடத்தில் பாலுஜியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடனும் ஒரு பரப்பரப்புடன் காத்திருந்தது பார்த்து என் கூட வந்தவர்களூகும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வழக்கமான பதிவுகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்று அமர்ந்தோம். எல்லோர் முகத்திலும் பாலுஜி எப்போ வருவார் என்ற கேள்வி குறியுடன் காத்திருந்தார்கள்.
பாலுஜி சரியாக காலை 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார் அவரின் தாமத வருகைக்கு காரணம் உள்ளது. பாலுஜி அவர்களை தெலுங்கில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய மரியாதை ராமண்ணா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் திரு. பத்நாபா அவர்கள் சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். விஜயவாடாவில் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி பட்ட பாலுஜி உடனே சென்னை வந்து அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வர தாமதாமாகிவிட்டது. நிகழ்ச்சி துவக்கத்திலே அவருக்கு ரசிகர்கள் எல்லோரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
அடுத்து, வழக்கம் போல் வரவேற்பு மற்றும் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி. என்னதான் தினமும் பாலுஜியின் குரலை வானொலியிலும் படங்களிலும் கேட்டாலும் அவரை நேரில் பாட்ச்சொல்லி கேட்பது ஒருவித ஸ்வாரசியம் அதே போல் அவருடன் யாராக இருந்தாலும் ஒரு போட்டோ எடுக்க விரும்பவுதும் அனவருக்கும் ஏற்படும் சாதாரணமான உணர்வு தான். அமைப்பாளர்கள் திட்டமிட்டதற்க்கு மேல் கூட்டம் சேர்ந்த படியால் நான்கு பேராக பாலுஜியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். பாலுஜி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு போட்டோ எடுக்கும் போது முன்னமே சந்தித்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி பேசியது வந்த ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அதை அப்பட்டமாக ரசிகர்கள் முகத்திலும் தெரிந்தது என்பது தான் உண்மை. அருகில் இருந்த பார்த்த எனக்கும் அந்த உற்சாகம் ஒட்டிக்கொண்டது.
திருமதி.கல்பனா, திரு.பாலாஜி,திரு.அசோக்,திரு.நடராஜன் ஆகியோரின் கோப்புக்கள் மட்டும் இங்கே ப்ளே லிஸ்டில் தரப்பட்டுள்ளது. இணையத்தில் ஏற்றும் பிரச்சனையால் சில பேர் பாடிய ஒலிக்கோப்புக்கள் மட்டும் தற்போது தற்காலிமாக இங்கே தரப்பட்டுள்ளது.
போட்டோ நிகழ்ச்சி முடிந்ததும் உடனே ரசிகர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி திறமையுள்ள ரசிகர்கள் தங்கள் குரலால் பாலுஜி பாடிய பாடல்களை பாடி அசத்தினார்கள். முதலாக திரைப்பட பின்ணனி பாடகி திருமதி.கல்பனா அவர்களின் தன் இனிமையான குரலால் பாலுஜி பாடிய பாடலை பாடி துவக்கி வைத்தார்கள். இங்கே ஒன்று சொல்ல வேண்டும் இந்த நிகழ்ச்சியை புதிதாக சேர்த்தார்கள் எப்போதும் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்கும் அந்த நிகழ்ச்சியை எடுத்து விட்டு இதை சேர்த்திருக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை. இங்கே எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் பாலுஜியிடம் ஒரு கேள்வி கேட்டால் போதும் பல தகவல்கள் வெளி வரும் ரசிகர்களூம் தெரிந்திருக்கலாம். அந்த வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.
தொடர்ந்து, திரு.மெல்லிசை மன்னர், திரு.கமல்ஹாசன், திரு.கங்கை அமரன் மற்றும் திரு.வித்யாசாகர் பாலுஜியை பற்றி சிலாகித்து சொன்ன பல அனுபவங்கள் பாராட்டுக்கள் ஒளிக்கோப்பாக ரசிகர்களுக்கு போட்டு கான்பிக்கப்பட்டது. அனைவரும் மிகவும் அமைதியுடன் ஸ்வரசியமாக கண்டு களித்தார்கள்.
மேலும், பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் நற்பணியாக சில உபகரனங்களை வந்தவாசியில் இருக்கும் ஒரு உயர்நிலை பள்ளிக்கு தேவையான மின்விசிறி போன்ற பல உபகரனங்கள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாலுஜி அவர்கள் வழங்கினார்கள். மேலும் ஒரு அனாதை ஆசிரமத்திற்க்கும் பெட்டிகள் மற்றும் ஸ்டீல் பீரோ ஆகியவற்றை பாலுஜி அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.
தொடர்ந்து ரசிகர்களின் திறமைகளை பற்றி அவரின் பேச்சு மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது என்றால் மிகையல்ல. நமது பெங்களூர் நன்பர்கள் திரு.ஆர்.ஜி.நாராயானன் மற்றும் புதுச்சேரி நன்பர்கள் திரு.அபுபக்கர் அவர்களின் தீவிர முயற்சியில் பாலுஜி அறிதான பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள், பழைய ரிக்கார்ட்கள் காட்சி பொருளாக வைத்திருந்தது எல்லோரையும் பரவசப்படுத்தியது.
பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் திரு.கிரிதர் ராஜா, திரு.அசோக்,திரு.சேசாத்திரி, திரு.தாசரதி மற்றும் மிகவும் அருமையாக நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்தி வெளியூர் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கி நன்றியுடன் வழியனுப்பினார்கள் கலந்து கொண்ட ஓவ்வொரு ரசிகர்கள் மனதிலும் எப்போது அடுத்த சந்திப்பு எங்கே ஆவலுடன் கேள்விக்குறியுடன் விடை பெற்று சென்றார்கள்.
சென்ற வாரம் 15.02.2009 ஞாயிறு அன்று நமது கலைஞர் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் 12 மணி வரை பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகன் என்ற அருமையான நிகழ்ச்சி முதல் பகுதி ஒளிப்பரப்பட்டது. இதை பாடும் நிலா பாலு தளத்தில் பதிவாக ஒலிக்கோப்புடன் வழங்கினேன். இதோ இந்த பதிவில் நேற்று 22.02.2009 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை 2 ஆவது பகுதி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர், சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து நமது யாகூ குழுவின் ரசிகர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திரு.விஜயகுமா, திரு.பாலாஜி, திருமதி.ஆ.லக்ஷ்மி ஆகியோரும், சேலம் மாவட்டத்தில் இருந்து திரு.ஆர்.துரைராஜ், திரு.கோகுலகிருஷ்னன், திருமதி.ரமாதேவி மேலும் சென்னை 2 அணியில் இருந்து திரு.சி.பாலாஜி, திரு.பிரகாஷ்,திரு.ஏ.எஸ்.நடராஜன் ஆகியோரும் மற்றும் சென்னை 3 ஆவது அணியில் இருந்து திரு.ஏ.ராமன், திரு.எம்.நடராஜன், திரு. பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு இந்த 2ஆவது பகுதியை மிகவும் சிறப்பாக வழங்கினார்கள். இனி ஒவ்வொரு குழுவும் எப்படி தன் திறமை காட்டினார்கள் என்று தாங்கள் ஒலிக்கோப்பில் தரவிறக்கம் செய்து கேட்கலாம். இருந்தாலும் முன்னோட்டமாக சில குறிப்பிடுவனவற்றை நான் எழுத விரும்புகிறேன்.
வேலூர் மாவட்ட அணியில் இருந்து திரு. விஜயகுமார் பல தொலைக்காட்சி மேடைகளில் தன் குரல் திறமையை வெளிகாட்டியுள்ளார். இந்த மேடை அவரின் அபிமான பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சியில் தனிப்பட்ட திறமையை முன் நிறுத்தி மிகவும் அசத்தலாக வழங்கினார். எல்லாகேள்விகளூக்கும் அழகாக நறுக்கு தெரித்தார் போல் சரியான பதில்கள் தந்தது பாராட்டபட வேண்டிய ஒன்று. மேலும் அவர் மடை திறந்து என்ற பாடலையும், தனித்திறமை சுற்றில் கலகல வென் கவிதைகள் என்ற பாடலையும் மிகவும் மிகவும் சிறப்பாக பாடி தன் பங்கை செவ்வனே செய்து பாலுஜியின் மீதுள்ள தன் அபிமானத்தை காட்டினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்கும் அவருடன் இருந்த மற்ற அன்பர்களூக்கும் வாழ்த்துக்கள்.
சென்னை 2 அணியில் திரு. ஆர். துரைராஜ் அவர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் அவருடன் சேர்ந்து ரமா தேவி அவர்களும் பாலுஜியின் ஆதிகால பாடலான ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடலை மிகவும் அனுபவபூர்வமாக உணர்ந்து பாடி கேட்பவர்களின் மனதை கொள்ளைக்கொண்டார் அதுமட்டுமல்லாமல் நடுவரின் சிறப்பான பாரட்டையும் பெற்றார். சென்னை 2 வது குழுவினருக்கும் வாழ்த்துககள்.
சென்னை 3 அணியில் பாலுஜியைப்போலவே உடல் வாகுவை போன்ற ரு.ஏ.எஸ்.நடராஜன் அவர்களின் புதுபுதுஅர்த்தங்கள் படத்தின் பாடலான கேளடி கண்மணி என்ற எனக்கு மிகவும் பிடித்த மெலோடி பாடலை மிகவுன் ரசித்து பாடி அசத்தினார். அவருடன் திரு. சி.பாலாஜியும் பாலுஜியின் சாரிட்டி பவுண்டேசன் பற்றிய தகவல்களை சொன்னது. அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் வெகுவாக பாராட்டி சொன்னது அசத்தலாக இருந்தது. அத்துடன் சாரிட்டி பவுண்டேசனில் எப்படி உறுப்பினராக சேர்வது என்ற வீடியோ க்ளிப்பிங் காண்த்தும் அதில் திரு. அசோக் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தது புதிய ரசிகர்கள் சேர்வதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது.
சேலம் மாவட்ட அணியில் இருந்து திரு. பாலாஜி அவர்கள் கடவுள் அமைத்து வைத்த பாடலையும் அதில் நடுவில் வரும் மிமிக்ரி நிகழ்ச்சியையும் சிறப்பாக ஒருவரே பாடி காண்பித்து ஒட்டு மொத்த ரசிகன் நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பாக வழங்கினார். அருமையாக பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த நிகழ்ச்சியின் நடுவராக வருகை தந்தவர் இசையமைப்பாளர் திரு. சிற்பி அவர்கள். அவர் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் ரசித்து தன் பங்குக்கு குழுவினரிடம் சில அழகான கேள்விகள் கேட்டு அருமையான பதில்கள் பெற்றார். அவரும் பாலுஜியின் மீது உள்ள தன் அன்பையும் சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்ர்க வைத்தார். முடிவில் இந்த நான்கு குழுக்களூம் பாலுஜியின் மீதுள்ள அன்பின் காரணமாக மிகவும் நன்றாக பாடினார்கள் யாரின் அன்பையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை அனைவரின் அன்பையும் பிரித்து பங்குப்போட்டு யாரி அதிகம் அதிகம் அன்பு செலுத்திறார் என்று குறிப்பிட்ட விரும்பவில்லை ஆகையால் அனைத்து குழுவினருக்கும் அவர்களின் திறமையை பாராட்டி பரிசுகள் வழங்குகிறேன் என்று சொல்லி எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நடுவர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் முன் தினம் இரவு 9 மணிக்கு ரசிகன் நிகழ்ச்சியின் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்ப்பு கொண்டு நாளை நிகழ்ச்சியை பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். ரசிகர்களூக்கும் சொல்லுங்கள் என்று சொல்லி. சில மாதங்கள் கழித்து இது போல் இன்னும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வேன் அதில் நீங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இந்த இரண்டு பகுதிகளையும் மிகவும் சிறப்பாக இயக்கி, சரியான இடத்தில் மிகவும் எடிட் செய்து எங்கள் பாலுஜியின் சார்ட்டி பவுண்டேசன் பற்றி சிறிய ஒளிக்கோப்பும் சேர்த்து இந்த சமூகத்துக்கு மேலும் சில நற்பணிகளை செய்ய உதவி செய்த இயக்குநர் அவர்களூகும் எங்களூக்கு இந்த வாய்ப்பு வழங்கிய தயாரித்த கிரேவிட்டி நிறுவனத்தாருக்கும் பாலுஜி சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்து கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த இரண்டு நிகழ்ச்சியின் ஒலித்தொகுப்பை பதிவு செய்து பாலுஜியின் பாடும் நிலா தளத்தில் வழங்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதற்க்கு மிகவும் ஒத்துழைத்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் என் பணிவான நன்றி.
One of our Group Member Mr.Karthik Raja, Namakkal sung two songs ouf guruji one of Sangeetha Megam then sinthu neram cute song. He sung very well and nice and another one song i will post later in this blog. What song wait for ir. Please. Send your comments in comment section.
Congratulation to Mr. Vellore Vijay Kumar (Red Shirt the Right side above Snap) This snap taken at Coimbatore Annual Meet.
Dear Friends,
One of our Group member Mr.Vellore Vijayakumar sung variety songs on one competition at Kalaijar TV Today (6.7.2008 Sunday) alongwith the competition singer Ms.KB.Chitra. I saw that programe. I and Coimbatore SPB Fans wishes to CONGRATULATION to him rendered excellent effort. He got First Prize at that competion. My favorite Announcer Mr.Abdhul hameed appreciated very much his singing and selection songs. Once again i wish him his effort. In this prog Mr. Vijay sung Two songs of our Gurujis song Thoda Thoda from Indira and Rathiriyil Poothirukum. Enjoy Every one and wish to him in comment section.
Mr.Venkitakrishnan is working in Software field..in USA since 1998. B.E Graduate from JNTU Anantapur (yes... the same college that Sri.SPB was in for few months in his 1st year...) We are basically Tamilians ..but I was born and had my studies in Anantapur, Andhrapradesh.
Sabhaaash Sariyaana Potti,
Dr.SPB Birthday Song >> Sung by (Our members Musicfully Mr.Karthik and Mr.Venkita Krishna)
This lovely song written by SPB Fan , Sri. Udhayabanu, Chennai, Song sung by ours beloved group member Mr. Venkitakrishna, Bostton, Sung this song again and send to me. Mr.Venkita Krishna sung very well his own style and own voice good effort. I listern carefully Mr.Venkita Krishna small changes in lyrics and sung this song. Changes words it was very nice listerning.(eg: In Pallavi Gurujiyin >> Balujiyin and another one changes in Second saranam second line) Enjoy every one. I and Venkita Krishna wish to Mr. Udhaya Banu. (I hope Sri.Udhaya banu accept Mr. Venkita Krishan words changes) Congratulation sir.
Lyrics: Tha.Vu.Udhayabhanu Sung by: Mr.Venkita Krishna, Bostton, USA