
திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்களின் இந்த முறை பாடப்பட்டிருக்கும் பாடல்கள் நம் மனதை ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலையை உண்டாக்கும் கந்தர்வ குரலோன் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் இரு பாடலகளை அமைதியாக மிகவும் அழகாக பாடி வழங்கியுள்ளார். "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" பாடல் அருமையாக உள்ளது.
மற்றொன்று பாலுஜியின் குரல் தேர்வு பாடலான" "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பாடல் தான் அது. எனக்கு உடனே ஒரிஜனல் பாட்லையும், பாலுஜி தன் சொந்தகுரலில் அதே பாடலை பாடியதையும் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஏனென்று தெரியவில்லை உடனே கேட்டேன். என்னைப்பொருத்தவரை இந்த பாடலின் உயிரோட்டமே பாடலின் அழுத்தம், எனெர்ஜி, வெயிட் என்று சொல்வாகளே கிருஷ்னன் சார் குரலில் சிறிது குறைவாகவே இருக்கின்றது என்று எனக்கு தோன்றுகிறது. (அவருக்கும் உங்களூக்கும் மற்ற இரண்டு பாடல்களையும் இங்கு தந்துள்ளேன் அவருடன் நீங்ளும் தான் கேட்டு அனுபவியுங்கள் வித்தியாசத்தை உணருங்கள்) இருந்தாலும், பெரியவர்கள் பாடிய இந்த பாடலின் தன்மையை சிறிதும் குறையாமல் உணர்வு பூர்வமாக அதே பாவத்துடன் பாடியிருப்பது சிறப்பான முயற்சி, அசத்தல் தான் போங்க. பாலுஜி அடிக்கடி என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்வது உண்டு. புதிய பாடகர்கள் அவர்களின் குரலுக்கு ஏற்றார் போல் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவது மிகவும் சிறப்பு என்று. பிறகு நல்ல அனுபவம் பெற்றவுடன் மற்ற பாடல்கள் பாடமுயற்சிக்கலாம் என்பார். அதே போல் கிருஷ்னன் சார் அழகான இந்த இரண்டு பாடல்களையும் தேர்ந்தெடுத்து பாடியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இதே போல் மெலோடி பாடல்களை தேர்ந்தெடுத்து வழங்குங்கள் சார். உங்கள் குரலுக்கு கேட்க நன்றாக உள்ளது.

திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஒரிஜனல் பாடல்.
திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் குரலில் அதே பாடல்.

பாலுஜியின் மேடை நிகழ்ச்சியில் இருந்து ஓர் பகுதி. இதன் முழு பாடல் பின்னர் வழங்கப்படும்.