SPB Foundation

SPB Foundation

Wednesday, February 24, 2010

பாலுஜி ரசிகர்கள் சந்திப்பு - சென்னைபாலுஜி ரசிகர்கள் சந்திப்பு - சென்னை >> அழைப்பிதழ் உதவி >> திரு.விகாஸ், மும்பை

டாக்டர் எஸ்.பி.பி ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் வருடாந்திர சந்திப்பு சென்ற 21ஆம் தேதி சுட்டெரிக்கும் இளவெயில் ஞாயிறு அன்று டாக்டர் பாலுஜி அவர்களின் ஒலிப்பதிவு கூடமான கோதண்டபானி ஆடியோ பதிவு கூடத்தில் அமர்க்களமாக நடைப்பெற்றது.பாலுஜி சந்திப்பு படம் உதவி >> திருமதி.கீதா நாராயாணன் கோவை (விரைவில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இங்கே பின்னர் சேர்க்கப்படும்)

காலை 9 மணியில் இருந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு பெங்களூர்,ஆந்திரா, திருச்சி,பாண்டிசேரி,கோவை பல ஊர்களில் இருந்து குவிய தொடங்கிவிட்டார்கள். நானும் கோவை கோபாலகிருஷ்னன் மற்றும் திருமதி. கீதா நாராயனன் அவர்களும் குடும்பத்துடன் 10.30க்கு தான் உள்ளே நுழைந்தோம் என்பது வேறு விஷயம். 10 மணி துவங்கும் என்று நிகழ்ச்சி நிரலில் தெரிவித்து இருந்தார்கள் பவுண்டேசன் அமைப்பாளர்கள். நேரம் நெருங்க நெருங்க சில்லென்ற குளிரூட்டப்பட்ட ஏசி ஒலிப்பதிவு கூடத்தில் பாலுஜியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடனும் ஒரு பரப்பரப்புடன் காத்திருந்தது பார்த்து என் கூட வந்தவர்களூகும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வழக்கமான பதிவுகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்று அமர்ந்தோம். எல்லோர் முகத்திலும் பாலுஜி எப்போ வருவார் என்ற கேள்வி குறியுடன் காத்திருந்தார்கள்.

பாலுஜி சரியாக காலை 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார் அவரின் தாமத வருகைக்கு காரணம் உள்ளது. பாலுஜி அவர்களை தெலுங்கில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய மரியாதை ராமண்ணா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் திரு. பத்நாபா அவர்கள் சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். விஜயவாடாவில் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி பட்ட பாலுஜி உடனே சென்னை வந்து அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வர தாமதாமாகிவிட்டது. நிகழ்ச்சி துவக்கத்திலே அவருக்கு ரசிகர்கள் எல்லோரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்து, வழக்கம் போல் வரவேற்பு மற்றும் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி. என்னதான் தினமும் பாலுஜியின் குரலை வானொலியிலும் படங்களிலும் கேட்டாலும் அவரை நேரில் பாட்ச்சொல்லி கேட்பது ஒருவித ஸ்வாரசியம் அதே போல் அவருடன் யாராக இருந்தாலும் ஒரு போட்டோ எடுக்க விரும்பவுதும் அனவருக்கும் ஏற்படும் சாதாரணமான உணர்வு தான். அமைப்பாளர்கள் திட்டமிட்டதற்க்கு மேல் கூட்டம் சேர்ந்த படியால் நான்கு பேராக பாலுஜியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். பாலுஜி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு போட்டோ எடுக்கும் போது முன்னமே சந்தித்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி பேசியது வந்த ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அதை அப்பட்டமாக ரசிகர்கள் முகத்திலும் தெரிந்தது என்பது தான் உண்மை. அருகில் இருந்த பார்த்த எனக்கும் அந்த உற்சாகம் ஒட்டிக்கொண்டது.

Powered by eSnips.com


திருமதி.கல்பனா, திரு.பாலாஜி,திரு.அசோக்,திரு.நடராஜன் ஆகியோரின் கோப்புக்கள் மட்டும் இங்கே ப்ளே லிஸ்டில் தரப்பட்டுள்ளது. இணையத்தில் ஏற்றும் பிரச்சனையால் சில பேர் பாடிய ஒலிக்கோப்புக்கள் மட்டும் தற்போது தற்காலிமாக இங்கே தரப்பட்டுள்ளது.

போட்டோ நிகழ்ச்சி முடிந்ததும் உடனே ரசிகர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி திறமையுள்ள ரசிகர்கள் தங்கள் குரலால் பாலுஜி பாடிய பாடல்களை பாடி அசத்தினார்கள். முதலாக திரைப்பட பின்ணனி பாடகி திருமதி.கல்பனா அவர்களின் தன் இனிமையான குரலால் பாலுஜி பாடிய பாடலை பாடி துவக்கி வைத்தார்கள். இங்கே ஒன்று சொல்ல வேண்டும் இந்த நிகழ்ச்சியை புதிதாக சேர்த்தார்கள் எப்போதும் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்கும் அந்த நிகழ்ச்சியை எடுத்து விட்டு இதை சேர்த்திருக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை. இங்கே எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் பாலுஜியிடம் ஒரு கேள்வி கேட்டால் போதும் பல தகவல்கள் வெளி வரும் ரசிகர்களூம் தெரிந்திருக்கலாம். அந்த வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.

தொடர்ந்து, திரு.மெல்லிசை மன்னர், திரு.கமல்ஹாசன், திரு.கங்கை அமரன் மற்றும் திரு.வித்யாசாகர் பாலுஜியை பற்றி சிலாகித்து சொன்ன பல அனுபவங்கள் பாராட்டுக்கள் ஒளிக்கோப்பாக ரசிகர்களுக்கு போட்டு கான்பிக்கப்பட்டது. அனைவரும் மிகவும் அமைதியுடன் ஸ்வரசியமாக கண்டு களித்தார்கள்.

மேலும், பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் நற்பணியாக சில உபகரனங்களை வந்தவாசியில் இருக்கும் ஒரு உயர்நிலை பள்ளிக்கு தேவையான மின்விசிறி போன்ற பல உபகரனங்கள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாலுஜி அவர்கள் வழங்கினார்கள். மேலும் ஒரு அனாதை ஆசிரமத்திற்க்கும் பெட்டிகள் மற்றும் ஸ்டீல் பீரோ ஆகியவற்றை பாலுஜி அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.

தொடர்ந்து ரசிகர்களின் திறமைகளை பற்றி அவரின் பேச்சு மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது என்றால் மிகையல்ல. நமது பெங்களூர் நன்பர்கள் திரு.ஆர்.ஜி.நாராயானன் மற்றும் புதுச்சேரி நன்பர்கள் திரு.அபுபக்கர் அவர்களின் தீவிர முயற்சியில் பாலுஜி அறிதான பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள், பழைய ரிக்கார்ட்கள் காட்சி பொருளாக வைத்திருந்தது எல்லோரையும் பரவசப்படுத்தியது.

பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் திரு.கிரிதர் ராஜா, திரு.அசோக்,திரு.சேசாத்திரி, திரு.தாசரதி மற்றும் மிகவும் அருமையாக நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்தி வெளியூர் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கி நன்றியுடன் வழியனுப்பினார்கள் கலந்து கொண்ட ஓவ்வொரு ரசிகர்கள் மனதிலும் எப்போது அடுத்த சந்திப்பு எங்கே ஆவலுடன் கேள்விக்குறியுடன் விடை பெற்று சென்றார்கள்.

நிகழ்ச்சியின் புகைப்படகாட்சிகள் பார்த்து மகிழுங்கள் இங்கே

19 comments:

usha said...

உங்களுக்கு என் நன்றி , முதலாய் மீட்டிங் பற்றிய வர்னனை தந்ததற்கு . கேள்வி பதில் பகுதி இல்லை என்று ரொம்ப குறை கொண்டிருகிறீர்கள் இல்லையா ? எப்பொழுதுமே ஒரே மாதிரி இருந்தால் நல்ல இருக்குமா சொல்லுங்கள் . அவருடைய விசிறிகள் அவர் எதிரில் பாட எவ்வளவு ஆவலாக இருப்பார்கள் , இந்த வாய்ப்பு எப்பொழுதுமே கிடைக்காதே . அதனால் இதையும் ஒரு மாறுதலாக எடுதுகொள்ளுங்களேன். எல்லோரும் இனிமையாக ரசித்தார்கள் , நமக்கு அதுதானே வேண்டும் ..ஆகா நல்லவிதமாக முடிந்தது , மிக்க நன்றி உங்கள் எழுத்துக்கு ..

Covai Ravee said...

Mikka nandri Madhu madam. Nikalchi arupthamaha nadaipettrathu ungal uzahipum mikavum uyarvanathu nerya help seithulleerkal. vaazhthukkal vanakkangkal.

Anonymous said...

anbulla ravee sir

thamizh padivu miga miga arumai. thangal pani endrum thodara vaazhthukkal.

anbudan
madhu

Anonymous said...

Thank you ravi Sir
Rgds
Vijayakrishnan, Chennai

Anonymous said...

Ravee Sir,

Great efforts. You have described the meet happenings in a detailed manner in Tamil.
I agree with you that we missed the interaction with SPB Sir.

I eagerly expect Dasarathi Sir's narration in English for the non-Tamil Fans and the
photos.

Regards,
V. Gopalakrishnan, Cbe

Covai Ravee said...

To Mr.Vijayakrishnan and Mr. Gopalkrishnan sir... Thanks for your encouragement.

Anonymous said...

Dear Covairavee sir,

I was very happy to meet you for the first time and found a nice gentleman in you and i am extremely delighted to receive your mail with my song.I am falling short of words to acknowledge your kind gesture.
WITH WARM REGARDS,

H.Natarajan,Chennai

Anonymous said...

Thank you so much ravi :-)...

Wuth Luv
Malar, Chennai

rahini said...

enakum oru santharppam epoo varum iraivaa baluvai paarkka

Anonymous said...

Hi sir...
Hope you are doing good.Thanks a lot sir.It's like a Jewel which you have gifted me.

We need to once meet in Hyd sir. Please share your Mobile number with me.

Thanks and Regards

MITHILESH VADDIPARTHI.

Covai Ravee said...

//கேள்வி பதில் பகுதி இல்லை என்று ரொம்ப குறை கொண்டிருகிறீர்கள் இல்லையா ? எப்பொழுதுமே ஒரே மாதிரி இருந்தால் நல்ல இருக்குமா சொல்லுங்கள் . அவருடைய விசிறிகள் அவர் எதிரில் பாட எவ்வளவு ஆவலாக இருப்பார்கள் , இந்த வாய்ப்பு எப்பொழுதுமே கிடைக்காதே . அதனால் இதையும் ஒரு மாறுதலாக எடுதுகொள்ளுங்களேன். எல்லோரும் இனிமையாக ரசித்தார்கள் , நமக்கு அதுதானே வேண்டும் .//

நிச்சயம் உஷா மேடம் நீங்க சொன்னது ரொம்ப சரி திரு.அசோக் அவர்கள் கூட நீங்கள் குறிப்பிட்டதை தான் சொன்னார். இருந்தாலும் என் மனதில் தோன்றியது என்னவென்றால் மாதம் முழுவதும் 3 மொழி தொலைக்காட்சிகளில் சளைக்காமல் பாடல் போட்டி நிகழ்ச்சி தந்து கொண்டிருக்கிறார் அவருக்கும் கூட இங்கேயுமா? என்று மனதில் தோன்றியிருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம் அந்த என்னத்தின் அடிப்படையில் நான் எழுதினேன் திரு.அசோக் சொன்ன படி நமது நன்பர்கள் கேட்ட கேள்விகளே கேட்பார்கள் என்பதும் ஒரு உண்மை. வித்தியாசமான கேள்விகளும் அதிகம் யாரும் கேட்பதில்லை. இதுவும் ஒரு காரணமாக இருக்கும் என்பது எனக்கும் தெரியும் எப்படியோ நீங்கள் சொன்னபடி நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

Covai Ravee said...

//enakum oru santharppam epoo varum iraivaa baluvai paarkka//

வாங்க ராகினி மேடம் ரொம்ப நாள் கழித்து உங்கள் பின்னூட்டம் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி மேலும் கவலை படாதீர்கள் உங்களுக்கும் அந்த பாக்கியம் கிடைக்கும்.

Anonymous said...

Dear Ravee,

This was great .The way you described the event, it was as good sitting and watching . Many thanks for sharing this to us. It was very fortunate that i could not able to attend for the event on last Sunday. In any case, i will speak to Mr. RG Narayan for further update.

Many thanks again.
Subramanian

Anonymous said...

Dear, SPB Fans,

Today, I met Mr.Gopalakrishnan @ coimbatore. he said that, about ths SPB Fans meet function and it's performance of the charitable trust.

wonderful efforts of the trust... It would reach great level in near future... I hope and bless from god for it.


Gopal anna suggest Mr Covai Ravee, and his interest for this groups is wondrful.

regards
anban
Ganesh S, Pollachi

Anonymous said...

Hello Ravi sir ,Very Nice Description i really miss a lot. Eageriy waiting for the photos. Thank u

Hemasri.

Anonymous said...

ravee sir thanks more i so spbfans voice blog . ok thanks have chennai spb meet viedo & photos next week i will see this blog ok again thanks.

Nawas.

Covai Ravee said...

To Sri.Subramanian, Sri.Samathur Ganes, Ms.Hemasri and Mr.Nawas..

Thanks to all for ur appreciation. Writeup is one of my duty. Next meet try to attend. all the best.

Anonymous said...

Thanks a lot sir..

S.Balaji (Shankar Ganesh,Chenai)

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in