ரசிகன் ரசிகன் ரசிகன் ஒலித்தொகுப்பு 2
ரசிகன் ரசிகன் ரசிகன் ஒலித்தொகுப்பு 2
|
அன்பு உள்ளங்களே..
சென்ற வாரம் 15.02.2009 ஞாயிறு அன்று நமது கலைஞர் தொலைக்காட்சியில் காலை 11 மணி முதல் 12 மணி வரை பத்மஸ்ரீ டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ரசிகன் என்ற அருமையான நிகழ்ச்சி முதல் பகுதி ஒளிப்பரப்பட்டது. இதை பாடும் நிலா பாலு தளத்தில் பதிவாக ஒலிக்கோப்புடன் வழங்கினேன். இதோ இந்த பதிவில் நேற்று 22.02.2009 அன்று காலை 11 மணி முதல் 12 மணி வரை 2 ஆவது பகுதி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேலூர், சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் இருந்து நமது யாகூ குழுவின் ரசிகர்கள் சிறப்பாக பங்கேற்றனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து திரு.விஜயகுமா, திரு.பாலாஜி, திருமதி.ஆ.லக்ஷ்மி ஆகியோரும், சேலம் மாவட்டத்தில் இருந்து திரு.ஆர்.துரைராஜ், திரு.கோகுலகிருஷ்னன், திருமதி.ரமாதேவி மேலும் சென்னை 2 அணியில் இருந்து திரு.சி.பாலாஜி, திரு.பிரகாஷ்,திரு.ஏ.எஸ்.நடராஜன் ஆகியோரும் மற்றும் சென்னை 3 ஆவது அணியில் இருந்து திரு.ஏ.ராமன், திரு.எம்.நடராஜன், திரு. பாலாஜி ஆகியோரும் கலந்து கொண்டு இந்த 2ஆவது பகுதியை மிகவும் சிறப்பாக வழங்கினார்கள். இனி ஒவ்வொரு குழுவும் எப்படி தன் திறமை காட்டினார்கள் என்று தாங்கள் ஒலிக்கோப்பில் தரவிறக்கம் செய்து கேட்கலாம். இருந்தாலும் முன்னோட்டமாக சில குறிப்பிடுவனவற்றை நான் எழுத விரும்புகிறேன்.
வேலூர் மாவட்ட அணியில் இருந்து திரு. விஜயகுமார் பல தொலைக்காட்சி மேடைகளில் தன் குரல் திறமையை வெளிகாட்டியுள்ளார். இந்த மேடை அவரின் அபிமான பாலுஜியின் ரசிகன் நிகழ்ச்சியில் தனிப்பட்ட திறமையை முன் நிறுத்தி மிகவும் அசத்தலாக வழங்கினார். எல்லாகேள்விகளூக்கும் அழகாக நறுக்கு தெரித்தார் போல் சரியான பதில்கள் தந்தது பாராட்டபட வேண்டிய ஒன்று. மேலும் அவர் மடை திறந்து என்ற பாடலையும், தனித்திறமை
சுற்றில் கலகல வென் கவிதைகள் என்ற பாடலையும் மிகவும் மிகவும் சிறப்பாக பாடி தன் பங்கை செவ்வனே செய்து பாலுஜியின் மீதுள்ள தன் அபிமானத்தை காட்டினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவருக்கும் அவருடன் இருந்த மற்ற அன்பர்களூக்கும் வாழ்த்துக்கள்.
சென்னை 2 அணியில் திரு. ஆர். துரைராஜ் அவர்கள் குறிப்பிட்டு சொல்ல வேண்டியவர் அவருடன் சேர்ந்து ரமா தேவி அவர்களும் பாலுஜியின் ஆதிகால பாடலான ஆயிரம் நிலவே வா என்ற அடிமைப்பெண் பாடலை மிகவும் அனுபவபூர்வமாக உணர்ந்து பாடி கேட்பவர்களின் மனதை கொள்ளைக்கொண்டார் அதுமட்டுமல்லாமல் நடுவரின் சிறப்பான பாரட்டையும் பெற்றார். சென்னை 2 வது குழுவினருக்கும் வாழ்த்துககள்.
சென்னை 3 அணியில் பாலுஜியைப்போலவே உடல் வாகுவை போன்ற ரு.ஏ.எஸ்.நடராஜன் அவர்களின் புதுபுதுஅர்த்தங்கள் படத்தின் பாடலான கேளடி கண்மணி என்ற எனக்கு மிகவும் பிடித்த மெலோடி பாடலை மிகவுன் ரசித்து பாடி அசத்தினார். அவருடன் திரு. சி.பாலாஜியும் பாலுஜியின் சாரிட்டி பவுண்டேசன் பற்றிய தகவல்களை சொன்னது. அதை நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் வெகுவாக பாராட்டி சொன்னது அசத்தலாக இருந்தது. அத்துடன் சாரிட்டி பவுண்டேசனில் எப்படி உறுப்பினராக சேர்வது என்ற வீடியோ க்ளிப்பிங் காண்த்தும் அதில் திரு. அசோக் அவர்கள் விளக்கமாக எடுத்துரைத்தது புதிய ரசிகர்கள் சேர்வதற்க்கு மிகவும் உதவியாக இருந்தது.
சேலம் மாவட்ட அணியில் இருந்து திரு. பாலாஜி அவர்கள் கடவுள் அமைத்து வைத்த பாடலையும் அதில் நடுவில் வரும் மிமிக்ரி நிகழ்ச்சியையும் சிறப்பாக ஒருவரே
பாடி காண்பித்து ஒட்டு மொத்த ரசிகன் நிகழ்ச்சிக்கும் முத்தாய்ப்பாக வழங்கினார். அருமையாக பாடி அனைவரின் உள்ளத்தையும் கொள்ளைகொண்டார் என்று சொன்னால்
அது மிகையாகாது.
இந்த நிகழ்ச்சியின் நடுவராக வருகை தந்தவர் இசையமைப்பாளர் திரு. சிற்பி அவர்கள். அவர் நிகழ்ச்சி முழுவதும் மிகவும் ரசித்து தன் பங்குக்கு குழுவினரிடம் சில அழகான கேள்விகள் கேட்டு அருமையான பதில்கள் பெற்றார். அவரும் பாலுஜியின் மீது உள்ள தன் அன்பையும் சொல்லி எல்லோரையும் மெய் சிலிர்ர்க வைத்தார். முடிவில் இந்த நான்கு குழுக்களூம் பாலுஜியின் மீதுள்ள அன்பின் காரணமாக மிகவும் நன்றாக பாடினார்கள் யாரின் அன்பையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை அனைவரின் அன்பையும் பிரித்து பங்குப்போட்டு யாரி அதிகம் அதிகம் அன்பு செலுத்திறார் என்று குறிப்பிட்ட விரும்பவில்லை ஆகையால் அனைத்து குழுவினருக்கும் அவர்களின் திறமையை பாராட்டி பரிசுகள் வழங்குகிறேன் என்று சொல்லி எல்லோரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நடுவர்.
மேலும், இந்த நிகழ்ச்சியின் முன் தினம் இரவு 9 மணிக்கு ரசிகன் நிகழ்ச்சியின் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் என்னிடம் தொடர்ப்பு கொண்டு நாளை நிகழ்ச்சியை
பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும் என்றும். ரசிகர்களூக்கும் சொல்லுங்கள் என்று சொல்லி. சில மாதங்கள் கழித்து இது போல் இன்னும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வேன்
அதில் நீங்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இந்த இரண்டு பகுதிகளையும் மிகவும் சிறப்பாக இயக்கி, சரியான இடத்தில் மிகவும்
எடிட் செய்து எங்கள் பாலுஜியின் சார்ட்டி பவுண்டேசன் பற்றி சிறிய ஒளிக்கோப்பும் சேர்த்து இந்த சமூகத்துக்கு மேலும் சில நற்பணிகளை செய்ய உதவி செய்த இயக்குநர்
அவர்களூகும் எங்களூக்கு இந்த வாய்ப்பு வழங்கிய தயாரித்த கிரேவிட்டி நிறுவனத்தாருக்கும் பாலுஜி சார்பாகவும் கோவை பாலுஜி ரசிகர்கள் சார்பாகவும் என் நன்றியை தெரிவித்து
கொள்வதில் மிகவும் மகிழ்கிறேன். அதுமட்டுமல்லாமல் நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை பெரும் வருத்தம் இருந்தாலும் இந்த இரண்டு நிகழ்ச்சியின்
ஒலித்தொகுப்பை பதிவு செய்து பாலுஜியின் பாடும் நிலா தளத்தில் வழங்க வாய்ப்பு கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன். அதற்க்கு மிகவும் ஒத்துழைத்த அனைத்து
அன்பு உள்ளங்களுக்கு மீண்டும் என் பணிவான நன்றி.
இந்த தொடரில் பங்கேற்ற ரசிகர்களின் ஒளித்தொகுப்புக்கள்
No comments:
Post a Comment