SPB Foundation

SPB Foundation
Showing posts with label தசாரதி. Show all posts
Showing posts with label தசாரதி. Show all posts

Wednesday, February 24, 2010

பாலுஜி ரசிகர்கள் சந்திப்பு - சென்னை



பாலுஜி ரசிகர்கள் சந்திப்பு - சென்னை >> அழைப்பிதழ் உதவி >> திரு.விகாஸ், மும்பை

டாக்டர் எஸ்.பி.பி ரசிகர்களின் சாரிட்டி பவுண்டேசன் சார்பில் வருடாந்திர சந்திப்பு சென்ற 21ஆம் தேதி சுட்டெரிக்கும் இளவெயில் ஞாயிறு அன்று டாக்டர் பாலுஜி அவர்களின் ஒலிப்பதிவு கூடமான கோதண்டபானி ஆடியோ பதிவு கூடத்தில் அமர்க்களமாக நடைப்பெற்றது.



பாலுஜி சந்திப்பு படம் உதவி >> திருமதி.கீதா நாராயாணன் கோவை (விரைவில் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் இங்கே பின்னர் சேர்க்கப்படும்)

காலை 9 மணியில் இருந்தே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்க்கு பெங்களூர்,ஆந்திரா, திருச்சி,பாண்டிசேரி,கோவை பல ஊர்களில் இருந்து குவிய தொடங்கிவிட்டார்கள். நானும் கோவை கோபாலகிருஷ்னன் மற்றும் திருமதி. கீதா நாராயனன் அவர்களும் குடும்பத்துடன் 10.30க்கு தான் உள்ளே நுழைந்தோம் என்பது வேறு விஷயம். 10 மணி துவங்கும் என்று நிகழ்ச்சி நிரலில் தெரிவித்து இருந்தார்கள் பவுண்டேசன் அமைப்பாளர்கள். நேரம் நெருங்க நெருங்க சில்லென்ற குளிரூட்டப்பட்ட ஏசி ஒலிப்பதிவு கூடத்தில் பாலுஜியை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடனும் ஒரு பரப்பரப்புடன் காத்திருந்தது பார்த்து என் கூட வந்தவர்களூகும் உற்சாகம் தொற்றிக் கொள்ள வழக்கமான பதிவுகள் எல்லாம் முடிந்து உள்ளே சென்று அமர்ந்தோம். எல்லோர் முகத்திலும் பாலுஜி எப்போ வருவார் என்ற கேள்வி குறியுடன் காத்திருந்தார்கள்.

பாலுஜி சரியாக காலை 11.30 மணிக்கு வந்து சேர்ந்தார் அவரின் தாமத வருகைக்கு காரணம் உள்ளது. பாலுஜி அவர்களை தெலுங்கில் முதன் முதலில் அறிமுகப்படுத்திய மரியாதை ராமண்ணா படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நகைச்சுவை நடிகர் திரு. பத்நாபா அவர்கள் சனிக்கிழமை அன்று காலமாகிவிட்டார். விஜயவாடாவில் ஒரு நிகழ்ச்சியில் கேள்வி பட்ட பாலுஜி உடனே சென்னை வந்து அந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வர தாமதாமாகிவிட்டது. நிகழ்ச்சி துவக்கத்திலே அவருக்கு ரசிகர்கள் எல்லோரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.

அடுத்து, வழக்கம் போல் வரவேற்பு மற்றும் போட்டோ எடுக்கும் நிகழ்ச்சி. என்னதான் தினமும் பாலுஜியின் குரலை வானொலியிலும் படங்களிலும் கேட்டாலும் அவரை நேரில் பாட்ச்சொல்லி கேட்பது ஒருவித ஸ்வாரசியம் அதே போல் அவருடன் யாராக இருந்தாலும் ஒரு போட்டோ எடுக்க விரும்பவுதும் அனவருக்கும் ஏற்படும் சாதாரணமான உணர்வு தான். அமைப்பாளர்கள் திட்டமிட்டதற்க்கு மேல் கூட்டம் சேர்ந்த படியால் நான்கு பேராக பாலுஜியுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள். பாலுஜி ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்திக் கொண்டு போட்டோ எடுக்கும் போது முன்னமே சந்தித்த நிகழ்ச்சியை நினைவுபடுத்தி பேசியது வந்த ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது அதை அப்பட்டமாக ரசிகர்கள் முகத்திலும் தெரிந்தது என்பது தான் உண்மை. அருகில் இருந்த பார்த்த எனக்கும் அந்த உற்சாகம் ஒட்டிக்கொண்டது.

Powered by eSnips.com


திருமதி.கல்பனா, திரு.பாலாஜி,திரு.அசோக்,திரு.நடராஜன் ஆகியோரின் கோப்புக்கள் மட்டும் இங்கே ப்ளே லிஸ்டில் தரப்பட்டுள்ளது. இணையத்தில் ஏற்றும் பிரச்சனையால் சில பேர் பாடிய ஒலிக்கோப்புக்கள் மட்டும் தற்போது தற்காலிமாக இங்கே தரப்பட்டுள்ளது.

போட்டோ நிகழ்ச்சி முடிந்ததும் உடனே ரசிகர்களின் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி திறமையுள்ள ரசிகர்கள் தங்கள் குரலால் பாலுஜி பாடிய பாடல்களை பாடி அசத்தினார்கள். முதலாக திரைப்பட பின்ணனி பாடகி திருமதி.கல்பனா அவர்களின் தன் இனிமையான குரலால் பாலுஜி பாடிய பாடலை பாடி துவக்கி வைத்தார்கள். இங்கே ஒன்று சொல்ல வேண்டும் இந்த நிகழ்ச்சியை புதிதாக சேர்த்தார்கள் எப்போதும் கேள்வி பதில் நிகழ்ச்சி இருக்கும் அந்த நிகழ்ச்சியை எடுத்து விட்டு இதை சேர்த்திருக்கிறார்கள் ஏனென்று தெரியவில்லை. இங்கே எதற்கு குறிப்பிடுகிறேன் என்றால் பாலுஜியிடம் ஒரு கேள்வி கேட்டால் போதும் பல தகவல்கள் வெளி வரும் ரசிகர்களூம் தெரிந்திருக்கலாம். அந்த வாய்ப்பு இல்லாமலே போய்விட்டது.

தொடர்ந்து, திரு.மெல்லிசை மன்னர், திரு.கமல்ஹாசன், திரு.கங்கை அமரன் மற்றும் திரு.வித்யாசாகர் பாலுஜியை பற்றி சிலாகித்து சொன்ன பல அனுபவங்கள் பாராட்டுக்கள் ஒளிக்கோப்பாக ரசிகர்களுக்கு போட்டு கான்பிக்கப்பட்டது. அனைவரும் மிகவும் அமைதியுடன் ஸ்வரசியமாக கண்டு களித்தார்கள்.

மேலும், பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் மூலம் நற்பணியாக சில உபகரனங்களை வந்தவாசியில் இருக்கும் ஒரு உயர்நிலை பள்ளிக்கு தேவையான மின்விசிறி போன்ற பல உபகரனங்கள் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பாலுஜி அவர்கள் வழங்கினார்கள். மேலும் ஒரு அனாதை ஆசிரமத்திற்க்கும் பெட்டிகள் மற்றும் ஸ்டீல் பீரோ ஆகியவற்றை பாலுஜி அவர்கள் வழங்கி மகிழ்வித்தார்.

தொடர்ந்து ரசிகர்களின் திறமைகளை பற்றி அவரின் பேச்சு மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது. கலந்து கொண்டவர்கள் முகத்தில் சந்தோசம் தாண்டவமாடியது என்றால் மிகையல்ல. நமது பெங்களூர் நன்பர்கள் திரு.ஆர்.ஜி.நாராயானன் மற்றும் புதுச்சேரி நன்பர்கள் திரு.அபுபக்கர் அவர்களின் தீவிர முயற்சியில் பாலுஜி அறிதான பாடல்கள் அடங்கிய குறுந்தகடுகள், பழைய ரிக்கார்ட்கள் காட்சி பொருளாக வைத்திருந்தது எல்லோரையும் பரவசப்படுத்தியது.

பாலுஜி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன் அமைப்பாளர்கள் திரு.கிரிதர் ராஜா, திரு.அசோக்,திரு.சேசாத்திரி, திரு.தாசரதி மற்றும் மிகவும் அருமையாக நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்தி வெளியூர் ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து வழங்கி நன்றியுடன் வழியனுப்பினார்கள் கலந்து கொண்ட ஓவ்வொரு ரசிகர்கள் மனதிலும் எப்போது அடுத்த சந்திப்பு எங்கே ஆவலுடன் கேள்விக்குறியுடன் விடை பெற்று சென்றார்கள்.

நிகழ்ச்சியின் புகைப்படகாட்சிகள் பார்த்து மகிழுங்கள் இங்கே

Wednesday, August 1, 2007

# 4 தேன் பூவே பூவே வா - தசாரதி

தசாரதி நமக்கு ஏற்கனவே அறிமுகமானவர் - இருந்தாலும் சில குறிப்புகள்:

-சக வலைப்பதிவர்.
-ஆங்கில வலைப்பதிவான http://spbindia.blogspot.com -இல் தொடர்ச்சியாகப் பதிவு செய்துகொண்டிருப்பவர்.
-அழகான விவரணைகளுடன் எழுதுவதில் வல்லவர்.

அவர் அனுப்பிய மடலில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்,

"I have taken the bold initiative of sending my SPB song to you for inclusion in the blog. The song is "thEn poovE poovE vaa ...." from "anbuLLa Rajinikanth".

This would be a boost to all others who are held back as they will start thinking "when this man has the courage to post a badly rendered song on the web, why not we with fairly good singing ability"

So, let me be the scape goat so that songs pour in from other fans
"

இப்படி (பாலு மாதிரி) அநியாயத்துக்கு அட்க்கமாக இருந்தால் என்ன செய்வது? நீங்களே இந்தப் பாடலைக் கேட்டுவிட்டுச் சொல்லுங்கள். நல்ல குரலில் அழகாகப் பாடியிருக்கிறார். கேட்க இனிமையாக இருக்கிறது.

அவர் இணைய மேடையேறிப் பாடிய இந்த அழகான பாடலைப் பதிவதில் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும் நன்றி தசாரதி. நிறைய பாடுங்கள்!

பாடல் : தேன் பூவே பூவே வா
படம் : அன்புள்ள ரஜினிகாந்த்

Get this widget | Share | Track details