SPB Foundation

SPB Foundation

Wednesday, November 21, 2007

காற்றில் எந்தன் கீதம்



திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்கள் பாலுஜியின் குரலினிமை மீது தான் அதிக ஆர்வம் என்று நான் தவறாக நினைத்து விட்டேன். அவர் இசையின் மீது எவ்வளவு ஆர்வம் வைத்துள்ளார் என்று கீழே உள்ள இரண்டு பாடல்களையும் கேளூங்கள். என் பார்வையில் அவர் ஓர் அற்புதமான கலைஞன். ஆமாம், இசையை நன்றாக ரசிக்க தெரிந்தவன் தான் ஓர் நல்ல கலைஞன் என்று நீங்கள் எல்லோரும் தெரிந்ததே. பாடல்களை பாடுவது, அல்லது பாட முயற்சி செய்வது எல்லாம் அடுத்த படி தான் (அந்த கொடுப்பினை எனக்கெல்லாம் வரமாட்டீங்குதே என்று ஏங்கியிருக்கிறேன்) . பாலுஜி அடிக்கடி சொல்வது போல் பாடல்களை அனுபவித்து நன்றாக பாடியுள்ளார். ஒர் நல்ல ரசிகன் தான் பாடல்களை நன்றாக அனுபவிக்க முடியும். அந்த வகையில். திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் அபாரமான துனிச்சல் பாரட்டத்தக்கது. என்னவென்று புருவத்தை உயர்த்துகிறீர்களா? ஆமாமுங்க. ஜானி படத்தில் பிரபலமான பாடலான "காற்றில் எந்தன் கீதம்" பாடலை துனிச்சலுடன் அவர் குரலில் பாடியிருக்கிறார் கேளுங்கள். மேலும் வசீகரா பாடலையும் சிறிதும் தயக்கமில்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இந்த துனிச்சலே அவரை அடையாளம் காட்டும். இந்த அவசரகால யுகத்தில் பாஸ்டனில் இருந்து தன் வேலைகளுக்கு இடையே எப்படி அவரால் இப்படி பாட முடிகின்றது என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொழில் முறை மேடை பாடகர்கள் கூட இது போல் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி பாடுவது என்பது இயலாத ஒன்று. பாடலை கேளுங்கள் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.



காற்றில் எந்தன் கீதம் : ஜானி

Get this widget | Track details | eSnips Social DNA


வசீகரா: மின்னல்

Get this widget | Track details | eSnips Social DNA


அதே சூட்டோடு பாலுஜியின் நம் மனதை மயக்கும் மிக மிக அழகான "பைலெ பைலெ பார் ஹை" என்ற ஒரு ஹிந்தி பாடலையும் பாடி கலக்கியிருக்கிறார். அதையும் தான் கேட்டுங்களேன்.

PehlaPehla.mp3

Wednesday, November 14, 2007

எங்கேயும் எப்போதும்



சமீபத்தில் பாஸ்டனில் இருந்து டொர்னாட்டோ சென்று நிகழ்ச்சியை ரசித்து பாலுஜி ஆசிர்வாதத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ. வளர்ந்து வரும் கலக்கல் பாடகர் திரு.வெங்கிட கிருஷ்னன், டொர்னாட்டோ, யு.எஸ்.



என்னவென்று தெரியவில்லை தீபாவளி திருநாளில் இருந்து இன்று வரை இந்த பாடல் கலக்கோ கலக்கு என்று கலக்குகிறது. போதா குறைக்கு புதிய 2 எப்.எம் ரேடியோக்கள் புதுசா வந்துருப்பதால் என்னைப்போல இசைப் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதுமட்டுமல்லாமல் திரு. கிருஷ்னன் சார் வேற மிகவும் அருமையாக, பாடி பட்டாசு கொளுத்திப்போடுவது போல் போட்டிருக்கிறார். அமர்க்களமான பாடலை தெரிவு செய்து வழங்கியிருக்கிறார். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். அவரின் முயற்ச்சியை மீண்டும் வாழ்த்துவோம். தொடருங்கள் கிருஷ்னன் சார்.

எங்கேயும் எப்போதும்

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, November 12, 2007

நம்ம ஊரு சிங்காரி



Mr.Venkitakrishnan is working in Software field..in USA since 1998. B.E Graduate from JNTU Anantapur (yes... the same college that Sri.SPB was in for few months in his 1st year...) We are basically Tamilians ..but I was born and had my studies in Anantapur, Andhrapradesh.

எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பிறப்பில் தமிழ்நாட்டுக்காரராக இருந்து ஆந்திரத்தில் படித்து பட்டம் பெற்று தற்போது டொர்னட்டோவில் வேலைப் பார்க்கும் திரு.வெங்கிட கிருஷ்னன் சார் எப்படி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பாலுஜி பாடிய பாடல்களை மிகவும் சுத்தமாக உச்சரித்து பாடுகின்றார் என்று பல தடவை வியந்துருக்கிறேன். அவருக்கு கடவுள் கிருபை அதிகம். நம்ம ஊரு சிங்காரி பாடல் சென்ற ஞாயிறு அன்று தான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிய சென்னன நிகழ்ச்சியில் பாலுஜி பாடிய இந்த பாடலை கேட்டேன் பல ஆண்டுகள் கழித்து அப்படியே அச்சரம் பிசகாமல் பாடியது என்னை வெகுவாக கவர்ந்தது (இதன் ஆடியோ ஒலிப்பதிவு பதிவாக பின்னர் வழங்குகிறேன்) தொடர்ந்து வெங்கிட கிருஷ்னன் சார் "மன்மதன் வந்தானாஆஆஆஆ நம்ம சங்கதி சொன்னானா ஆஆஆஅ" என்று வேறு கலக்குகிறார். வாழ்த்துக்கள் கிருஷ்னன் சார்.

நம்ம ஊரு சிங்காரி, நினைட்தாலே இனிக்கும்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, November 8, 2007

அக்கம் பக்கம்.. வெட்டருவா தூக்கி..



பாலுஜி தன் இனிமையான குரலில் பாடிய "அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா" மற்றும் தேவர் மகனில் பாடிய "வெட்டருவா தூக்கி" பாடலையும் நமது அன்பு நண்பர் திரு. சங்கர் கனேஷ் (எஸ்.பாலாஜி) அவர்கள். தன் இனிமையான குரலில் இசை இல்லாமல் அழகாக பாடி எனக்கு அனுப்பிவைத்தார். வெட்டருவா தூக்கி பாடலை நான் பல முறை பாடும் நிலா பாலு தளத்தில் பதிய வேண்டுமென்று நினைத்ததுண்டு. அதற்கு சரியான நேரம் வாய்க்கவில்லை. அதை சரிக்கட்ட பாலுஜியின் ரசிகர் பாடிய அவர் பாடலை மிகவும் நிதானமாக அற்புதமாக பாடி நமக்கு விருந்து படைத்துள்ளார். அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா என்ற பாடலையும் மிகவும் கவனாமாக பாடி அசத்தியிருக்கிறார். திரு. சங்கர் கனேஷ் அவரின் வாழ்க்கையில் மேன் மேலும் நல்ல பாடல்கள் பாடி வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துவோம்.


அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா >> உன்னால் முடியும் தம்பி

Get this widget | Track details | eSnips Social DNA



வெட்டருவா தூக்கி >> தேவர் மகன்

Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, November 6, 2007

தகிட தத்துமி



சலங்கை ஒலியில் வரும் தகிடதத்துமி பாடலை தமிழிலும், தெலுங்கிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார். இந்த பாடலை கேட்க்கும் போது அவருக்கு தாளம் ஞானம் அருமையாக கைகொடுக்கிறது. உச்சஸ்தாயியில் மட்டும் அவர் மிகவும் சிரமப்பட்டு பாடுவது நன்றாக தெரிகிறது (அருமையான முயற்சி, அதுமட்டுமல்லாமல் பாலுஜி பாடல் என்றால் 0.01% ஆவது கஷ்டப்பட்டால் தான் முடியும் ) கம்மிஸ்தாயியில் அட்டகாசமாக கலக்குகிறார் என்பது என் கருத்து இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடுவது என்பது பாராட்டபடவேண்டிய ஒன்று. பாடல்களை ரசிப்பதற்கே ஒரு கடவுள் கிருபை வேண்டும், அதுவும் பாட முயற்சி செய்வது அதற்கும் மேல், பாலுஜியின் பாடல்களை நல்ல குரலுடன் எல்லா மொழிகளிலும் பாடுவது என்றால் நிச்சயம் கடவுள் அருள் அவருக்கு கிடைத்திருக்கிறது. நிச்சயம் இவர் குரலை பாலுஜி இந்த தளத்தின் மூலம் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என்று என் நம்பிக்கை. அவர் மேடை நிகழ்ச்சியில் பாடினார் என்றால் இன்னும் தன் குரலை நன்றாக மெருகேற்றலாம். அமெரிக்காவில் இங்கு இருக்கும் போல இன்னிசைகுழுக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

தகிட தத்துமி தமிழில்

Get this widget | Track details | eSnips Social DNA


தகிட தத்துமி தெலுங்கில்
Get this widget | Track details | eSnips Social DNA

அம்மா அழகே



இந்த பாடலை பாஸ்டன் திரு. வெங்கிட கிருஷனன் அவர்கள் மறுமுறை அழகாக பாலுஜி குரலை பல இடங்களில் தொட்டு அபாரமாக பாடியுள்ளார். காதல் ஓவியம் என்ற படத்தில் வரும் அம்மா அழகே பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று பாலுஜி மிகவும் அனுபவித்து பல இடங்களில் நம் மனதை கலங்கடிப்பார். அதே போல் கிருஷ்னன் சாரும் மிகவும் பாடல் வரிகளில் ஒன்றி பாடியிருப்பது அவரின் இசை திறமையை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இதுவும் ஒரு நல்ல முயற்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.


Get this widget | Track details | eSnips Social DNA

ஐயப்பன் பாடல்கள்



வளர்ந்து வரும் பாடகர் திரு. எஸ்.பாலாஜி, எஸ்.பி.பி ரசிகர் குழு.

நமது எஸ்.பி.பி இணையதள ரசிகர் வளர்ந்து வரும் பாடகர் இனிய குரலோன் திரு. பாலாஜி (சங்கர் கனேஷ், சென்னை) எனது இனிய நண்பர். இன்று என் அன்பு வேண்டு கோளுக் கிணங்க ஐயப்பன் மீது அவர் பாடிய மூன்று ஆல்பத்தில் இருந்து 3 அருமையான ஐயப்ப பக்திப்பாடல்களை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார். இவர் பாடிய இந்த பாடலைக் கேட்டால் புதியதாக பாட முயற்சிக்கும் பாடகர்களூக்கு, பாடுவது என்பது இவ்வளவு சுலபமா என்ற எண்ணத்தை தோற்றிவிடுகிறார். அந்த அளவிற்கு தன் சொந்தக்குரலில் கஷ்டப்படாமல் பாடியிருப்பது இசையின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும், பல மேடைக்கச்சேரிகளில் பாடிய அனுபவமும் நன்றாக தெரிகின்றது. அவர் மேன் மேலும் பல நல்ல பாடல்களை அவர் குரலில் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மூன்று பாடல்களிலும் பாடல் வரிகள் மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. நீங்களூம் அவரின் பாடலைக் கேட்டு அவரை வாழ்த்துங்கள். இந்த தளத்தின் மூலம் அவருக்கு ஓர் நல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கட்டும்.



1. எங்கும் நிறைந்த ஒளியாக நீ எதிலும் உறையும் பொருளாக

ஆல்பம்: பெரிய பாதை
இசை: பகவதி குமார்
பாடியவர்: சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்: பி.எம்.கிருஷ்னன்
தயாரிப்பு: பட்டீஸ் ஆடியோ

Get this widget | Track details | eSnips Social DNA



2. வாழும் வரை உந்தன் பெயரை என்றும் நான் மறவாமல்
ஆல்பம்: வழி காட்டும் ஐயப்பா
பாடியவர்: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA


3. சம்போதரனே ஹரிஹர சுதனவனே
ஆல்பம்: ஹரிஹர சுதனே
பாடியவர்: சங்கர் கனேஷ்

Get this widget | Track details | eSnips Social DNA