SPB Foundation

SPB Foundation

Monday, July 30, 2007

# 3 நீ வருவாய் என - ஆனந்த் பிரபு

ஆனந்த் பிரபு அசத்தலாக பாலுவின் நீ வருவாய் என பாடலைப் பாடியிருக்கிறார். கேட்டு மகிழுங்கள்.

பாடல் : நீ வருவாய் என
படம் : நீ வருவாய் என
பாடிய ரசிகர்: ஆனந்த் பிரபு

nee_varuvai.mp3

Friday, July 27, 2007

#2 மின்னலே நீ வந்ததேனடி - ஆனந்த் பிரபு



பாடலைக் கேட்பதற்குமுன் ஆனந்த்பிரபு என்ற இவரைப் பற்றிச் சொல்ல வேண்டும். அருமையான குரல் வளம் உள்ளவர். அருமையான பாடகர். நியூயார்க் மாநிலத்தில் வசிக்கிறார். இளைஞர். வலைப்பதிவர். அவரது 'ஆனந்த மழை' வலைப்பதிவு சுவாரஸ்யமானது. அவர் பாடிய அருமையான பல பாடல்களைத் தொகுத்திருக்கிறார். அட்டகாசமான புகைப்படத் தொகுப்பையும் நீங்கள் பார்க்கலாம். இது தவிர ஓவியரும் கூட.

அவர் பாடிய 'தாலாட்ட வருவாளோ?' பாடலைத்தான் முதன்முதலில் கேட்டு அவரது வலைப்பதிவுக்குச் சென்றேன்.

மே மாதம் படத்தில் பாலு பாடியிருக்கும் மின்னலே என்ற அருமையான பாடலை ஆனந்த் அருமையாகப் பாடியிருக்கிறார்.

பாராட்டுகள் ஆனந்த்.

அதை இங்கு கேளுங்கள்.

Get this widget | Share | Track details

# 1 முன் பனியா - முரளி கிருஷ்ணன்

முரளி கிருஷ்ணன் என்பவர் சிறப்பாகப் பாடியிருக்கும் பாலுவின் முன் பனியா (நந்தா) பாடல் உங்கள் பார்வைக்கு இங்கே. படத்தில் வருபவரும் முரளி கிருஷ்ணனா என்று தெரியவில்லை. யூட்யூபில் கிடைத்த ஒளிக்கோப்பு இது.

அருமையான பாடல், நல்ல ஒளியாக்கம். அவருக்குப் பாராட்டுகள்.



Singer : Muralikrishnan
Actor : Don't know (may be it's Muralikrishnan too!)
Song : Munpaniya from Nandha

Great singing and good picturization!

Friday, July 20, 2007

முதற் பதிவு

நமக்குள்ளே ஒரு பாடகர் உண்டு. சிலர் பாடும் திறமையை வெளிக்காட்டி முயன்று பாடகராகப் பரிமளிப்பது உண்டு. நம்மில் பெரும்பாலானோர் கூச்சப்பட்டுக்கொண்டு குளியலறையோடு பாடுவதை நிறுத்திக்கொள்வதுண்டு. சிலர் வீட்டுக்குள் பாடிக்கொண்டிருப்போம். ஆனால் பொதுவில் பேரமைதி காப்போம்.

பாலுவின் ரசிகர்களாக இருந்துகொண்டு அவரது பாடல்களை நம் வாய் முணுமுணுக்கவாவது செய்யாத நாட்களுண்டா?

ரசிகருக்காகவே இந்தப் பதிவைத் துவங்கியிருக்கிறேன்.

பாலுவின் ரசிகராக நீங்கள் உங்கள் குரலை இணையத்தில் ஒலிக்கச் செய்யலாம். கூச்சமோ நாச்சமோ என்ன வேண்டுமானாலும் பட்டுக் கொள்ளுங்கள். ஆனால் யாரும் பக்கத்தில் இல்லாத தருணங்களில் நீங்கள் மனம் விட்டுப் பாடும் பல தருணங்களைப் பதிவு செய்து ஒலிக்கோப்பாக வலையில் ஏற்றுங்கள். ஏற்றிவிட்டு அந்தச் சுட்டியை எனக்கு அனுப்புங்கள். அதை இந்த வலைப்பதிவில் பதிகிறேன். பாடல்களை வலையேற்றுவதற்கு esnips.com போன்ற தளங்களில் ஒரு இலவசக் கணக்கு துவங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இதில் சிரமம் இருந்தால் பாடலை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் (pepsundar@gmail.com). நான் வலையேற்றிக் கொள்கிறேன்.

உங்களுக்குள் புதைந்து கிடக்கும் உங்களின் திறமை அடையாளம் காணப்படலாம். உங்களுக்குள் இருக்கும் பாடகர் வெளிப்பட சந்தர்ப்பங்கள் உங்கள் கதவை தட்டலாம். எதுவும் இல்லாவிட்டாலும் மனத் திருப்திக்காக நீங்கள் பாடியது இணையத்தில் ஒலிக்கட்டும். என்றாவது பாலு இதைக் கேட்பார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

ஆகவே - பாடுங்கள், பதியுங்கள். கரோக்கியாகப் பாடினாலும் இசையற்றுப் பாடினாலும் எப்படி வேண்டுமானாலும் பாடிப் பதியுங்கள். எந்த வரம்பும் தர நிர்ணயமும் இல்லை. ஆதலால் சுதந்திரமாகப் பாடுங்கள். முழுப் பாடலைப் பாடாவிட்டாலும் ஒரு சரணத்தையாவது பாடுங்கள்.

உங்கள் குரல் இணையவுலகில் ஒலிக்கட்டும் - பாலுவின் சார்பாக, பாலுவின் ரசிகர்கள் குரலாக!

வாழ்த்துகள்.