SPB Foundation

SPB Foundation

Tuesday, November 6, 2007

தகிட தத்துமி



சலங்கை ஒலியில் வரும் தகிடதத்துமி பாடலை தமிழிலும், தெலுங்கிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார். இந்த பாடலை கேட்க்கும் போது அவருக்கு தாளம் ஞானம் அருமையாக கைகொடுக்கிறது. உச்சஸ்தாயியில் மட்டும் அவர் மிகவும் சிரமப்பட்டு பாடுவது நன்றாக தெரிகிறது (அருமையான முயற்சி, அதுமட்டுமல்லாமல் பாலுஜி பாடல் என்றால் 0.01% ஆவது கஷ்டப்பட்டால் தான் முடியும் ) கம்மிஸ்தாயியில் அட்டகாசமாக கலக்குகிறார் என்பது என் கருத்து இருந்தாலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பாடுவது என்பது பாராட்டபடவேண்டிய ஒன்று. பாடல்களை ரசிப்பதற்கே ஒரு கடவுள் கிருபை வேண்டும், அதுவும் பாட முயற்சி செய்வது அதற்கும் மேல், பாலுஜியின் பாடல்களை நல்ல குரலுடன் எல்லா மொழிகளிலும் பாடுவது என்றால் நிச்சயம் கடவுள் அருள் அவருக்கு கிடைத்திருக்கிறது. நிச்சயம் இவர் குரலை பாலுஜி இந்த தளத்தின் மூலம் கேட்க வாய்ப்பு கிடைக்கும் என்று என் நம்பிக்கை. அவர் மேடை நிகழ்ச்சியில் பாடினார் என்றால் இன்னும் தன் குரலை நன்றாக மெருகேற்றலாம். அமெரிக்காவில் இங்கு இருக்கும் போல இன்னிசைகுழுக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்தால் அவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.

தகிட தத்துமி தமிழில்

Get this widget | Track details | eSnips Social DNA


தகிட தத்துமி தெலுங்கில்
Get this widget | Track details | eSnips Social DNA

2 comments:

Anonymous said...

Ravee Sir..
Thank you very much for posting the songs and for your
comments. I have my wife read it for me, as i can't
read Tamil.
Ennodiya muyarchiyai paaraatti ezhudinadhukku ...romba
nandri...adhukkumel...ungalodu frank opinionkku
...thanks. Thakita Thadimi..recording in the house is
difficult without vocal monitors etc.. I would
certainly try to sing it better.

Ungaludiya nalla vaazhthukal , ennodu muyarchi,
andavanodiya krupai....
enakku oru nalla vaaippu kudukkum ennu ehirpaarkiraen.

Thank you.
VenkataKrishna.

Anonymous said...

மிக்க நன்றி கிருஷ்னன் சார், தங்களைப் போன்ற ஆர்வமுள்ளவர்களை பாலுஜியின் பார்வைக்கு கொண்டு செல்வதே என் கடமை அதற்கு வாய்ப்பு தந்த திரு. சுந்தர் சாருக்கு தங்களூடன் சேர்ந்து நன்றி சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நிறைய பாடல்கள் அனுப்புங்கள் சார்.