SPB Foundation

SPB Foundation

Wednesday, November 21, 2007

காற்றில் எந்தன் கீதம்



திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்கள் பாலுஜியின் குரலினிமை மீது தான் அதிக ஆர்வம் என்று நான் தவறாக நினைத்து விட்டேன். அவர் இசையின் மீது எவ்வளவு ஆர்வம் வைத்துள்ளார் என்று கீழே உள்ள இரண்டு பாடல்களையும் கேளூங்கள். என் பார்வையில் அவர் ஓர் அற்புதமான கலைஞன். ஆமாம், இசையை நன்றாக ரசிக்க தெரிந்தவன் தான் ஓர் நல்ல கலைஞன் என்று நீங்கள் எல்லோரும் தெரிந்ததே. பாடல்களை பாடுவது, அல்லது பாட முயற்சி செய்வது எல்லாம் அடுத்த படி தான் (அந்த கொடுப்பினை எனக்கெல்லாம் வரமாட்டீங்குதே என்று ஏங்கியிருக்கிறேன்) . பாலுஜி அடிக்கடி சொல்வது போல் பாடல்களை அனுபவித்து நன்றாக பாடியுள்ளார். ஒர் நல்ல ரசிகன் தான் பாடல்களை நன்றாக அனுபவிக்க முடியும். அந்த வகையில். திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் அபாரமான துனிச்சல் பாரட்டத்தக்கது. என்னவென்று புருவத்தை உயர்த்துகிறீர்களா? ஆமாமுங்க. ஜானி படத்தில் பிரபலமான பாடலான "காற்றில் எந்தன் கீதம்" பாடலை துனிச்சலுடன் அவர் குரலில் பாடியிருக்கிறார் கேளுங்கள். மேலும் வசீகரா பாடலையும் சிறிதும் தயக்கமில்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இந்த துனிச்சலே அவரை அடையாளம் காட்டும். இந்த அவசரகால யுகத்தில் பாஸ்டனில் இருந்து தன் வேலைகளுக்கு இடையே எப்படி அவரால் இப்படி பாட முடிகின்றது என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொழில் முறை மேடை பாடகர்கள் கூட இது போல் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி பாடுவது என்பது இயலாத ஒன்று. பாடலை கேளுங்கள் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.



காற்றில் எந்தன் கீதம் : ஜானி

Get this widget | Track details | eSnips Social DNA


வசீகரா: மின்னல்

Get this widget | Track details | eSnips Social DNA


அதே சூட்டோடு பாலுஜியின் நம் மனதை மயக்கும் மிக மிக அழகான "பைலெ பைலெ பார் ஹை" என்ற ஒரு ஹிந்தி பாடலையும் பாடி கலக்கியிருக்கிறார். அதையும் தான் கேட்டுங்களேன்.

PehlaPehla.mp3

2 comments:

Anonymous said...

Ravee sir..
Thank you very much for your kind words and encouragement. I am thankful to you for taking time out to do the write up and publish my songs on the post.

Thanks
with best wishes
Krishna.V, Bostton

தங்ஸ் said...

ரொம்ப நல்லா பாடியிருக்கீங்க..