SPB Foundation

SPB Foundation

Wednesday, October 31, 2007

வேல வேல..



பாஸ்டன் திரு. வெங்கிட கிருஷனன் அவர்களின் மறுமுறை அற்புதமாக முயற்சி செய்து அவ்வை சண்முகி படத்தில் இருந்து "வேல வேல " பாடல். கரோக்கியலே கலக்கலாக பாடி அசத்தியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

Monday, October 29, 2007

என்னோடு பாட்டு பாடுங்கள் 2 வது பகுதி விரைவில்



இது விளம்பரம் அல்ல. டாக்டர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் அவரின் அன்பு ரசிகர்களுக்காக தெரிவிக்கப்படும் தகவல். ஆகையால் தகுதியுள்ள எஸ்.பி.பி ரசிகைகள் கலந்து கொண்டு அவர்களின் திறமையை காட்டி எங்களூக்கு மீண்டும் ஒரு நல்ல நிகழ்ச்சியை வழங்கு வேண்டுமென்று மிக்க ஆவலுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கலந்து கொள்ள விருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

என்னோடு பாட்டு பாடுங்கள் 2 வது பகுதியை 20 வயதிற்கும் மேற்பட்ட திருமணமான பெண்மணிகள் பங்குபெறலாம். இதில் கலந்துகொள்ள தகுதிகள்.

1. வயது 20ல் இருந்து 39க்குள் இருக்கனும்
2. நீங்கள் திருமணம் ஆனவர்களாக இருக்கனும்
3. நல்ல குரல் வளம், தெளிவான உச்சரிப்பு, ஸ்ருதி தாளம் ரொம்ப ரொம்ப முக்கியம்

உங்கள் குரல் வளத்தை ஒரு குறும் பாடலாக சிடி, அல்லது காஸெட்டிலியோ பதிவு செய்து கூடவே உங்கள பற்றிய பயோ டாட்டவையும் சேர்த்து அனுப்பவேண்டிய முகவரி:

ஹமாம் நலங்குமாவு "என்னோடு பாட்டு பாடுங்கள்"
ஜெயா டிவி
தபால் பெட்டி எண்: 3173
சென்னை - 600 032

SEND CD OR CASSETS WITH YOUR FULL BIODATA: TO

HAMAM NALANGUMAAVU ENNOODU PAATTU PAADUNGAL - 2
JAYA TV
POST BOX NO. 3173
CHENNAI - 600 032

FOR SING THROUGH YOUR MOBILE: 505101099

FOR SING THROUGH YOUR LAND LINE: 1255564

இதுமட்டுமல்லாமல் உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்ய. உங்கள் மொபைல் போன் மூலம் பதிவு செய்ய 505101099 என்ற எண்ணுக்கு கால் செய்யலாம்.

உங்கள் லேண்ட் லைன் மூலமாக பதிவு செய்ய 1255564 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

போன்ல பதிவு செய்ய உங்கள் பாட்டு பாடி, போன்லேயே பாட்டு பாடனும் உங்கள் பயோ டேட்டாவையும் சொல்ல மறக்காதீங்க.

எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா உங்கள் விலாசம் சிடி, பயோடேட்டாவோட அனுப்பிவைங்க.

என்னோடு பாட்டு பாடுங்கள் 2 ஆவது பகுதி விரைவில் ஆரம்பம்.


Get this widget | Track details | eSnips Social DNA

Tuesday, October 16, 2007

என் பேரு படையப்பா



சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா படத்தில் பாலுஜி அவர்களால் பாடப்பட்ட படையப்பா பாடலை திரு.வெங்கிட கிருஷ்னன் அவர்கள் கரோக்கியில் பாடியுள்ள அதே பாடலை அவருடைய ஸ்டைலில் முயற்சி செய்து பாடியுள்ளார். நன்றாக உள்ளது.


Get this widget | Track details | eSnips Social DNA

மண்ணில் இந்த காதலின்றி



இயக்குநர்: திரு.கே.வசந்த்

யாரும் பாடப்பயப்படும் கேளடி கண்மணி" பாலுஜி, ராதிகா அவர்கள் நடித்து பாடிய "மண்ணில் இந்த காதல்" என்ற தமிழ் பாடலையும், அதே படத்தில் வந்த ஓ பாப்பா லாலி, மாடேரானி சின்னதானி என்ற தெலுங்கு மொழி பாடலையும் சிறிதும் தயக்கம் இல்லாமல் பாடியுள்ளார். அட்டகாசமான முயற்சி. அவருக்கு வாழ்த்துக்கள்.

தமிழில்: கேளடி கண்மனி: மண்ணில் இந்த காதலின்றி



Get this widget | Track details | eSnips Social DNA



தெலுங்கில் : ஓ பாப்பா லாலி, மாடேரானி சின்னதானி (maateraani chinnadaani)

Get this widget | Track details | eSnips Social DNA

ராகம் தாளம் பல்லவி



சங்கரா பரணத்தில் வரும் இந்த அழகான பாடலான "ராகம் தாளம் பல்லவி" பாடலை கவனமாக நல்ல உச்சரிப்புடன் கவனமாக பாடியுள்ளார். இந்த பாடலில் மிகவும் சிரமப்பட்டு பாடியிருப்பது நன்றாக தெரிகிறது. இதுவும் ஒரு நல்ல முயற்சி. இவருக்கு ஒரு யோசனை ஜெயா டிவியில் வரும் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து கேட்டு வருவார் என்று நினக்கிறேன். இல்லையென்றால் என்னோடைய ஒலிகோப்புகளை கேட்டு வந்தால். அவருக்கு பாலுஜி அவர்கள் வழங்கும் நல்ல தகவல்கள் இவருக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

கிருஷ்னன் சார், நீங்கள் மேடை கச்சேரிகளில் பங்கேற்கலாமே?. நான் உங்களூக்கு ஒரு கோப்பு உங்களுக்கு ஷேர் செய்கின்றேன் அதில் உள்ள எல்லா கோபுகளையும் உங்களூக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேளுங்கள். உங்கள் குரலினிமை, பாடும் விதம் மிகவும் இன்னும் நன்றாக இருக்கும். உங்களின் இடைவிடா முயற்சிக்கு என்றாவது ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் பலன் கிடைக்கும். என் வாழ்த்துக்கள். இதே தளத்தில் எனது ஒரு பதிவான ஆர்ச்செஸ்ட்ரா 2 ஒலிக்கோப்பு உள்ளது அதையும் கேளூங்கள்.


Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 11, 2007

சங்கரா



பாஸ்டன் திரு. வெங்கிட கிருஷனன் அவர்களின் அபாரமான முயற்சி. சங்கராபரணத்தில் இருந்து "சங்கரா" பாடல். இந்த பாடலை அவர் எதில் பதிவு செய்தார்? கரோக்கியலோ அல்லது ஸ்டேஜ் நிகழ்ச்சியா என்று தெரியவில்லை. இந்த பாடல் அவரின் குரலுக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டு. அட்டகாசமான முயற்சி அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA

மூன்று முகம்




மூன்று மொழி சூப்பர் ஸ்டார் பாஸ்டனில் இருந்து திரு. வெங்கிட கிருஷ்னன், அவர்களின் குரலில் பாலுஜியின் பாடல்கள் கலக்கல் தான் பாலுஜியின் குரலை சிறிது கூட தொடாமல் அவரின் சொந்த குரலில் பாடி நம்மை பரசவப்படுத்தியிருக்கிறார். பாலுஜியின் பாடல்களை கேட்டாலே போதும் கோடி புன்னியம் நமக்கு கிட்டும். திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்கள் சிறிதும் பயமில்லாமல் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பம்பாய் பாடலான "காதல் ரோஜாவே" பாடலை பாடி அசத்தியிருக்கிறார். நீங்களூம் கேட்டு மகிழுங்கள். அவருக்கு பாலு ரசிகர்கள் சார்பாக வாழ்த்து நான் சொன்னால் மட்டும் போதாது உங்கள் வாழ்த்துக்களையும் கீழே மறுமொழி பொட்டியில் போட்டு அவருக்கு மேன் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்துங்கள்.

காதல் ரோஜாவே - தமிழில்

Get this widget | Track details | eSnips Social DNA


நாசெல்லி ரோஜாவே - சுந்தரதெலுங்கினில்

Get this widget | Track details | eSnips Social DNA


ரோஜா ஜாநேமென் - ஹிந்தி பாஷாவில்

Get this widget | Track details | eSnips Social DNA

Friday, October 5, 2007

அரச்ச சந்தனம்



பிரபு நடித்த சின்னத்தம்பி படத்தில் அரச்ச சந்தனம் பாடலை பாஸ்டனில் இருந்து திரு. வெங்கட கிருஷ்னா அவர்கள் எனக்கு அனுப்பிய அழகான பாடல் வெங்கிட கிருஷ்னா குரலில் இனிமையாக இருக்கிறது. இந்த பாடல் நன்றாக முயற்சி செய்து கவனமாக பாடியுள்ளார். அவரின் முயற்ச்சிக்கு பாலு ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகின்றேன்.

Get this widget | Track details | eSnips Social DNA


தெலுங்ககில்

Get this widget | Track details | eSnips Social DNA

Thursday, October 4, 2007

எ.பா.பா: செல்வி.ரஞ்சனிக்கு வாழ்த்துக்கள்




வேலை பளுவின் காரணமாக சில நாட்களாக ஆங்கில தளத்திலும், பாடும் நிலா பாலுவிலும் பதிய வேண்டிய பாலுஜியின் "என்னோடு பாட்டு பாடுங்கள்" என்ற ஜெயா தொலைக்காட்சியின் இசைபோட்டி நிகழ்ச்சியின் விடுபட்டு போயிருந்தது. தற்போது 7.4.2007 & 21.4.2007 அன்று
ஒளிப்பரப்பிய நிகழ்ச்சிகளின் ஒலிக்கோப்பை இந்த ரசிகர்களின் குரல் தளத்தில் பதிவதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கு அனுமதியளித்த திரு. சுந்தர் அவர்களூக்கு மிக்க நன்றி.
இந்த தளத்தில் பதிவதன் முக்கிய நோக்கமே புதியவர்களுக்கு பாலுஜியின் தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கமே ஆகும். அதனால் என்னிடம் இருக்கும்
கோப்புகளை முடிந்தவரை இந்த தளத்தில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.

படங்கள் உதவி: நன்றி: திருமதி.உஷா, ஹைதராபாத்

குறள் நாதம்:
கோப்பு 1
260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

கோப்பு 2
505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா என்று நடுவரை பாலுஜி அறிமுகப்படுத்திய விதமே அலாதியானது. நடுவராக வந்தவர் பிரபல வீணை கலைஞர் : திருமதி. வீணைகாயத்ரி,
சென்னை.

போட்டியில் பங்கேற்ற பாடகர்கள்.

1. செல்வி. ரஞ்சனி - பி.சுசீலாம்மா பாடிய பாடல் "உன்னை ஒன்று கேட்பேன்".
2. திரு. பழனி கிருஷ்னன் - பாலுஜி இசையமைத்து பாடிய பாடல் "வண்ணம் கொண்ட".
3. செல்வி. சாஸ்வதி ஜகதீஸ் - "நினைத்து நினைத்து" பாடல் 7G ரெயின்போகாலனி என்ற படத்தில்.
4. செல்வி. ராதிகா - பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் " தமிழுக்கு அமுது என்று பேர்"
5. செல்வி. பல்லவி - "கண்ணா கருமை நிறக்கண்ணா" என்ற பாடல்
6. செல்வி. விஜயலக்ஷ்மி - "மாலை பொழுதின் மயக்கத்திலே" என்ற பாடல்

கோப்பு 1ல் - அதிகம் கேட்டிறாத பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் படமாக்கப்படாத ஒரு பாடல் "வீரத்துலே கவியெழுதி" அழகான பாடல்.

கோப்பு - 1

Get this widget | Track details | eSnips Social DNA


பொதுவான சங்கதிகள்;

கோப்பு 1. குழந்தைகள் எய்ட்ஸ் பற்றி அற்புதமான விளக்கம்.



கோப்ப் 2. பெண்களின் திருமண வயது பற்றி அழகான விளக்கம்.

1. செல்வி. ரஞ்சனி - 253
2. திரு. பழனி கிருஷ்னன் - 189
3. செல்வி. சாஸ்வதி ஜகதீஸ் - 219
4. செல்வி. ராதிகா - 203
5. செல்வி. பல்லவி - 175
6. செல்வி. விஜயலக்ஷ்மி - 209

இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அற்புதமாக பாடி முதல் இடத்தை பெற்ற செல்வி. ரஞ்சனி அவர்களுக்கு பாலுஜியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.


கோப்பு 2.

Get this widget | Track details | eSnips Social DNA