எ.பா.பா: செல்வி.ரஞ்சனிக்கு வாழ்த்துக்கள்
வேலை பளுவின் காரணமாக சில நாட்களாக ஆங்கில தளத்திலும், பாடும் நிலா பாலுவிலும் பதிய வேண்டிய பாலுஜியின் "என்னோடு பாட்டு பாடுங்கள்" என்ற ஜெயா தொலைக்காட்சியின் இசைபோட்டி நிகழ்ச்சியின் விடுபட்டு போயிருந்தது. தற்போது 7.4.2007 & 21.4.2007 அன்று
ஒளிப்பரப்பிய நிகழ்ச்சிகளின் ஒலிக்கோப்பை இந்த ரசிகர்களின் குரல் தளத்தில் பதிவதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இதற்கு அனுமதியளித்த திரு. சுந்தர் அவர்களூக்கு மிக்க நன்றி.
இந்த தளத்தில் பதிவதன் முக்கிய நோக்கமே புதியவர்களுக்கு பாலுஜியின் தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்ற நோக்கமே ஆகும். அதனால் என்னிடம் இருக்கும்
கோப்புகளை முடிந்தவரை இந்த தளத்தில் பதிவதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
படங்கள் உதவி: நன்றி: திருமதி.உஷா, ஹைதராபாத்
குறள் நாதம்:
கோப்பு 1
260 கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்
கோப்பு 2
505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா என்று நடுவரை பாலுஜி அறிமுகப்படுத்திய விதமே அலாதியானது. நடுவராக வந்தவர் பிரபல வீணை கலைஞர் : திருமதி. வீணைகாயத்ரி,
சென்னை.
போட்டியில் பங்கேற்ற பாடகர்கள்.
1. செல்வி. ரஞ்சனி - பி.சுசீலாம்மா பாடிய பாடல் "உன்னை ஒன்று கேட்பேன்".
2. திரு. பழனி கிருஷ்னன் - பாலுஜி இசையமைத்து பாடிய பாடல் "வண்ணம் கொண்ட".
3. செல்வி. சாஸ்வதி ஜகதீஸ் - "நினைத்து நினைத்து" பாடல் 7G ரெயின்போகாலனி என்ற படத்தில்.
4. செல்வி. ராதிகா - பஞ்சவர்ணக்கிளி என்ற படத்தில் " தமிழுக்கு அமுது என்று பேர்"
5. செல்வி. பல்லவி - "கண்ணா கருமை நிறக்கண்ணா" என்ற பாடல்
6. செல்வி. விஜயலக்ஷ்மி - "மாலை பொழுதின் மயக்கத்திலே" என்ற பாடல்
கோப்பு 1ல் - அதிகம் கேட்டிறாத பாடல் அடிமைப்பெண் என்ற படத்தில் படமாக்கப்படாத ஒரு பாடல் "வீரத்துலே கவியெழுதி" அழகான பாடல்.
கோப்பு - 1
|
பொதுவான சங்கதிகள்;
கோப்பு 1. குழந்தைகள் எய்ட்ஸ் பற்றி அற்புதமான விளக்கம்.
கோப்ப் 2. பெண்களின் திருமண வயது பற்றி அழகான விளக்கம்.
1. செல்வி. ரஞ்சனி - 253
2. திரு. பழனி கிருஷ்னன் - 189
3. செல்வி. சாஸ்வதி ஜகதீஸ் - 219
4. செல்வி. ராதிகா - 203
5. செல்வி. பல்லவி - 175
6. செல்வி. விஜயலக்ஷ்மி - 209
இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் அற்புதமாக பாடி முதல் இடத்தை பெற்ற செல்வி. ரஞ்சனி அவர்களுக்கு பாலுஜியின் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
கோப்பு 2.
|
No comments:
Post a Comment