வளர்ந்து வரும் பாடகர் திரு. எஸ்.பாலாஜி, எஸ்.பி.பி ரசிகர் குழு.
நமது எஸ்.பி.பி இணையதள ரசிகர் வளர்ந்து வரும் பாடகர் இனிய குரலோன் திரு. பாலாஜி (சங்கர் கனேஷ், சென்னை) எனது இனிய நண்பர். இன்று என் அன்பு வேண்டு கோளுக் கிணங்க ஐயப்பன் மீது அவர் பாடிய மூன்று ஆல்பத்தில் இருந்து 3 அருமையான ஐயப்ப பக்திப்பாடல்களை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தார். இவர் பாடிய இந்த பாடலைக் கேட்டால் புதியதாக பாட முயற்சிக்கும் பாடகர்களூக்கு, பாடுவது என்பது இவ்வளவு சுலபமா என்ற எண்ணத்தை தோற்றிவிடுகிறார். அந்த அளவிற்கு தன் சொந்தக்குரலில் கஷ்டப்படாமல் பாடியிருப்பது இசையின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டையும், பல மேடைக்கச்சேரிகளில் பாடிய அனுபவமும் நன்றாக தெரிகின்றது. அவர் மேன் மேலும் பல நல்ல பாடல்களை அவர் குரலில் வழங்க வேண்டும் என்று வாழ்த்தி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். மூன்று பாடல்களிலும் பாடல் வரிகள் மிகவும் எளிமையாக எழுதப்பட்டுள்ளன. நீங்களூம் அவரின் பாடலைக் கேட்டு அவரை வாழ்த்துங்கள். இந்த தளத்தின் மூலம் அவருக்கு ஓர் நல்ல நல்ல வாய்ப்பு கிடைக்கட்டும்.
1. எங்கும் நிறைந்த ஒளியாக நீ எதிலும் உறையும் பொருளாக
ஆல்பம்: பெரிய பாதை
இசை: பகவதி குமார்
பாடியவர்: சங்கர் கனேஷ்
பாடலாசிரியர்: பி.எம்.கிருஷ்னன்
தயாரிப்பு: பட்டீஸ் ஆடியோ
2. வாழும் வரை உந்தன் பெயரை என்றும் நான் மறவாமல்
ஆல்பம்: வழி காட்டும் ஐயப்பா
பாடியவர்: சங்கர் கனேஷ்
3. சம்போதரனே ஹரிஹர சுதனவனே
ஆல்பம்: ஹரிஹர சுதனே
பாடியவர்: சங்கர் கனேஷ்