SPB Foundation

SPB Foundation

Wednesday, January 2, 2008

ஆயிரம் நிலவே வா, ராகங்கள் பதினாறு

அடிமைப்பெண், தில்லுமுல்லு என்ற இரண்டு படங்களில் இருந்து சூப்பரான பாடல்களைப் பாடி கிருஷ்னன் சார் கலக்கியிருக்கிறார். பாலுஜி அவர்களின் பாடல்களை அழகாக தேர்வு செய்து பாடுவது அவரின் ரசிப்பு திறமையை காட்டுகிறது. அசத்தலாக பாடியிருக்கும் கிருஷ்னன் சாரரின் பாடல்களள போகப்போக தனி ஆல்பமாகவே போட்டுடலாம் போலிருக்கிறது. அவரின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்.

ஆயிரம் நிலவே வா - அடிமைப்பெண்

Get this widget | Track details | eSnips Social DNA


ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு

Get this widget | Track details | eSnips Social DNA

மனைவி அமைவதெல்லாம், பச்சைக்கிளிகள்




திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் மற்றும் இரண்டு பாடல். பத்மஸ்ரீ கே.ஜே.தாஸண்ணாவின் குரலில் இந்த இரண்டு பாடல்கள் ஒன்று மனைவி அமைவதெல்லாம் மன்மதலீலை மற்றும் பச்சைக்கிளிகள் தோளோடு இந்தியன் என்ற படங்களில் வருவது. பாலுஜியின் தீவிர ரசிகரான கிருஷ்னன் சாரின் மற்றுமொரு அவதாரம் இது. கேட்டு மகிழுங்கள். வாழ்த்துங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


பச்சைக்கிளிகள் தோளோடு

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, December 19, 2007

டூயட்டில் உணர்ச்சியில்லை : எஸ்.பி.பி.பேச்சு




நவீன பாணி பாடல் பதிவு டூயட்டில் உணர்ச்சியில்லை எஸ்.பி.பி.பேச்சு

சென்னை, டிச 20: பாடகி இல்லாமல் நவீன பாணீயில் பாடல் பதிவு செவதால் டூயட்டில் உணர்ச்சியில்லை என்றார் எஸ்.பி.பாலசுபிரமணீயம் பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பேர் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படம் 'வெள்ளித்திரை'. இந்தப் படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இசை அமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி கேசட்டை வெளியிட, மலையாள நடிகர் மோகன்லால் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

அவர்களை பாராட்டி பாடகர் எஸ்.பி.பாலசுபிரமணியம் பேசியதாவது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்து உலக சாதனை படைத்தவர்கள். அவர்களது இசையின் தாக்கம் இல்லாமல் இப்போது ஒரு பாட்டுகூட வெளிவருவதில்லை. இவர்கள் கடித்து துப்பிய எச்சிலைத்தான் இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலத்தில் ஒரே ட்ராக்கில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்கள். இப்போது 200 ட்ராக் இருந்தாலும் அவரது தரத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. நவீன இசையமைப்பில், உடன் பாடுபவர்களின் குரலும் கேட்பதில்லை. டூயட் பாட்டு என்றால் கூட தனியாக உணர்ச்சியே இல்லாமல் பாட வேண்டியுள்ளது. உடன் பாடுவது யார் என்று கேட்டால், 'இன்னும் முடிவு செய்யவில்லை, உங்க ட்ராக்கை மட்டும் பாடுங்கள்' என்று சொல்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். நடிகர் ப்ருத்விராஜ், இயக்குனர்கள் மணிரத்னம், விஜி, கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் வித்யாசாகர், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் ஷங்கர் பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினகரன். 20.12.2007

Tuesday, December 18, 2007

படைத்தானே, கண்ணால் பேசும்



பாலுஜி அவர்களின் ரசிகர் குழுவின் மாடரேட்டர்களில் ஒருவர் திரு. தாசரதி அவர்கள் பாலுஜியின் "படைத்தானே பிரம்ம தேவன்" மற்றும் "கண்ணால் பேசும் " ஆகிய இரு பாடல்கள் இசையில்லாமல் அமைதியாக பாடி அசத்தியுள்ளார். அவர் பாடிய இந்த இரு பாடல்களை கேட்டால் மிகவும் சிரமில்லாமல் பாடியது போல் எனக்கு தோன்றுகிறது அப்படிதானே தாசரதி சார்? இவர் பாடிய விதத்தை கேட்டால் கேடப்பவர்களூக்கு அடேடே இவ்வளவு ஈஸியா? நாமும் பாடலமே என்ற ஆசையை தூண்டி விடும் குரல். குறிப்பாக கண்ணால் பேசும் பாடலை இசையில்லாமல் பாடினாலும் தாளம் சரியாக உள்ளது நம்மையையும் அறியாமல் தாளம் போடவைக்கும் பாடல் சரணங்களில் நல்ல முயற்சி செய்திருக்கிறார். அழகான பாடல் தேர்வு அவருக்கு என் வாழ்த்துக்கள். பாலுஜியின் அபிமான ரசிகர்கள் அனைவரும் இவ்விரு பாடல்களை கேட்டு அவரை வாழ்த்துங்கள்.

படைத்தானே பிரம்ம தேவன்

Get this widget | Track details | eSnips Social DNA






கண்ணால் பேசும்

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, December 5, 2007

நிலவே என்னிடம்




திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்களின் இந்த முறை பாடப்பட்டிருக்கும் பாடல்கள் நம் மனதை ஒரு விதமான வித்தியாசமான சூழ்நிலையை உண்டாக்கும் கந்தர்வ குரலோன் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் இரு பாடலகளை அமைதியாக மிகவும் அழகாக பாடி வழங்கியுள்ளார். "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" பாடல் அருமையாக உள்ளது.

Get this widget | Track details | eSnips Social DNA


மற்றொன்று பாலுஜியின் குரல் தேர்வு பாடலான" "நிலவே என்னிடம் நெருங்காதே" என்ற பாடல் தான் அது. எனக்கு உடனே ஒரிஜனல் பாட்லையும், பாலுஜி தன் சொந்தகுரலில் அதே பாடலை பாடியதையும் கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஏனென்று தெரியவில்லை உடனே கேட்டேன். என்னைப்பொருத்தவரை இந்த பாடலின் உயிரோட்டமே பாடலின் அழுத்தம், எனெர்ஜி, வெயிட் என்று சொல்வாகளே கிருஷ்னன் சார் குரலில் சிறிது குறைவாகவே இருக்கின்றது என்று எனக்கு தோன்றுகிறது. (அவருக்கும் உங்களூக்கும் மற்ற இரண்டு பாடல்களையும் இங்கு தந்துள்ளேன் அவருடன் நீங்ளும் தான் கேட்டு அனுபவியுங்கள் வித்தியாசத்தை உணருங்கள்) இருந்தாலும், பெரியவர்கள் பாடிய இந்த பாடலின் தன்மையை சிறிதும் குறையாமல் உணர்வு பூர்வமாக அதே பாவத்துடன் பாடியிருப்பது சிறப்பான முயற்சி, அசத்தல் தான் போங்க. பாலுஜி அடிக்கடி என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்வது உண்டு. புதிய பாடகர்கள் அவர்களின் குரலுக்கு ஏற்றார் போல் பாடல்களை தேர்ந்தெடுத்து பாடுவது மிகவும் சிறப்பு என்று. பிறகு நல்ல அனுபவம் பெற்றவுடன் மற்ற பாடல்கள் பாடமுயற்சிக்கலாம் என்பார். அதே போல் கிருஷ்னன் சார் அழகான இந்த இரண்டு பாடல்களையும் தேர்ந்தெடுத்து பாடியுள்ளார். அவருக்கு என் வாழ்த்துக்கள். இதே போல் மெலோடி பாடல்களை தேர்ந்தெடுத்து வழங்குங்கள் சார். உங்கள் குரலுக்கு கேட்க நன்றாக உள்ளது.



திரு.பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் ஒரிஜனல் பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA


திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் குரலில் அதே பாடல்.

Get this widget | Track details | eSnips Social DNA




பாலுஜியின் மேடை நிகழ்ச்சியில் இருந்து ஓர் பகுதி. இதன் முழு பாடல் பின்னர் வழங்கப்படும்.

Get this widget | Track details | eSnips Social DNA

Wednesday, November 21, 2007

காற்றில் எந்தன் கீதம்



திரு. வெங்கிட கிருஷ்னன் அவர்கள் பாலுஜியின் குரலினிமை மீது தான் அதிக ஆர்வம் என்று நான் தவறாக நினைத்து விட்டேன். அவர் இசையின் மீது எவ்வளவு ஆர்வம் வைத்துள்ளார் என்று கீழே உள்ள இரண்டு பாடல்களையும் கேளூங்கள். என் பார்வையில் அவர் ஓர் அற்புதமான கலைஞன். ஆமாம், இசையை நன்றாக ரசிக்க தெரிந்தவன் தான் ஓர் நல்ல கலைஞன் என்று நீங்கள் எல்லோரும் தெரிந்ததே. பாடல்களை பாடுவது, அல்லது பாட முயற்சி செய்வது எல்லாம் அடுத்த படி தான் (அந்த கொடுப்பினை எனக்கெல்லாம் வரமாட்டீங்குதே என்று ஏங்கியிருக்கிறேன்) . பாலுஜி அடிக்கடி சொல்வது போல் பாடல்களை அனுபவித்து நன்றாக பாடியுள்ளார். ஒர் நல்ல ரசிகன் தான் பாடல்களை நன்றாக அனுபவிக்க முடியும். அந்த வகையில். திரு. வெங்கிட கிருஷ்னன் சாரின் அபாரமான துனிச்சல் பாரட்டத்தக்கது. என்னவென்று புருவத்தை உயர்த்துகிறீர்களா? ஆமாமுங்க. ஜானி படத்தில் பிரபலமான பாடலான "காற்றில் எந்தன் கீதம்" பாடலை துனிச்சலுடன் அவர் குரலில் பாடியிருக்கிறார் கேளுங்கள். மேலும் வசீகரா பாடலையும் சிறிதும் தயக்கமில்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இந்த துனிச்சலே அவரை அடையாளம் காட்டும். இந்த அவசரகால யுகத்தில் பாஸ்டனில் இருந்து தன் வேலைகளுக்கு இடையே எப்படி அவரால் இப்படி பாட முடிகின்றது என்று மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தொழில் முறை மேடை பாடகர்கள் கூட இது போல் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்கி பாடுவது என்பது இயலாத ஒன்று. பாடலை கேளுங்கள் உங்கள் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.



காற்றில் எந்தன் கீதம் : ஜானி

Get this widget | Track details | eSnips Social DNA


வசீகரா: மின்னல்

Get this widget | Track details | eSnips Social DNA


அதே சூட்டோடு பாலுஜியின் நம் மனதை மயக்கும் மிக மிக அழகான "பைலெ பைலெ பார் ஹை" என்ற ஒரு ஹிந்தி பாடலையும் பாடி கலக்கியிருக்கிறார். அதையும் தான் கேட்டுங்களேன்.

PehlaPehla.mp3

Wednesday, November 14, 2007

எங்கேயும் எப்போதும்



சமீபத்தில் பாஸ்டனில் இருந்து டொர்னாட்டோ சென்று நிகழ்ச்சியை ரசித்து பாலுஜி ஆசிர்வாதத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோ. வளர்ந்து வரும் கலக்கல் பாடகர் திரு.வெங்கிட கிருஷ்னன், டொர்னாட்டோ, யு.எஸ்.



என்னவென்று தெரியவில்லை தீபாவளி திருநாளில் இருந்து இன்று வரை இந்த பாடல் கலக்கோ கலக்கு என்று கலக்குகிறது. போதா குறைக்கு புதிய 2 எப்.எம் ரேடியோக்கள் புதுசா வந்துருப்பதால் என்னைப்போல இசைப் பிரியர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அதுமட்டுமல்லாமல் திரு. கிருஷ்னன் சார் வேற மிகவும் அருமையாக, பாடி பட்டாசு கொளுத்திப்போடுவது போல் போட்டிருக்கிறார். அமர்க்களமான பாடலை தெரிவு செய்து வழங்கியிருக்கிறார். இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் ஒரு முறை கூட சலிக்காத பாடல். அவரின் முயற்ச்சியை மீண்டும் வாழ்த்துவோம். தொடருங்கள் கிருஷ்னன் சார்.

எங்கேயும் எப்போதும்

Get this widget | Track details | eSnips Social DNA