டாக்டர். எஸ்.பி.பி, திரு. அசோக் ராமமூர்த்தி, சென்னை
நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த பதிவில் பாடல் வருகிறது. வேலை பளூவின் காரணமாக தொடர இயலவில்லை. இனி அடிக்கடி பாடல் பதிவு இதில் இடம் பெறும். அதன் தொடர்ச்சியாக இந்த பாடல் பதிவு. சமீபத்தில் கோவையில் நடைபெற்ற பாலுஜி ரசிகர்களுக்காகவே பாலுஜி வருகை தந்து கலந்து கொண்டு நேரடி சந்திப்பும், அனாதை இல்லத்திற்கு இலவச பொருட்கள் வழங்குவதற்கும் வருகை தந்தார். என் வாழ்நாளில் மறக்க முடியாத அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குழுவில் இருக்கும் ஒருவர், பாலுஜியின் தீவிர ரசிகர் திரு. அசோக் ராமமூர்த்தி அவர்கள் , சென்னை, எஸ்.பி.பி ரசிகர்கள் சாரிட்டி பவுண்டேசன், சென்னை, குழுவில் பொருளாளராகவும் மற்றும் எஸ்.பி.பி ரசிகர்கள் யாகூ குழுவின் மாடரேட்டர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் சமீபத்தில் ராஜ் தொலைக்காட்சி நடத்திய ஏர்டெல் ஸ்டார் ஸிங்கர் போட்டியில் கலந்து கொண்டு பாலுஜியின் அற்புதமான ஒரு பாடலான நேற்று இன்று நாளை என்ற படத்தில் வரும் “பாடும் போது நான் தென்றல் காற்று” என்ற அழகான பாடலை பாடினார். இது ஒரு நல்ல முயற்சி அவர் பாடிய பாடலை செல்பேசியில் ஒலிப்பதிவு (ஒலிக்கோப்பு சுமாராகதான் இருக்கும் இருந்தாலும் கேட்கலாம்) செய்து எனக்கு அனுப்பினார். பாடலை நன்றாக நிறுத்தி, நிதானமாக, கவனமாக பாடியுள்ளார். அவருடைய குரலுக்கு ஏற்றார் போல் நல்ல பாட்டைத்தான் தேர்ந்தெடுத்து பாடியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று, பாடலில் எந்த ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் பாலுஜி ஸ்டைலை அப்படியே பின்பற்றி பாடியுள்ளது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. பாலுஜி ரசிகராக இருப்பது இது தான் பிரச்சனை தன்னையறியாமல் குரலில் அவர் சாயல் வருவது தவிர்க்க முடியாது. இதேபோல், அந்த சாயலிலே பாடி கச்சேரிகளில் எத்தனை குடும்பங்கள் பிழைக்கின்றன என்பது எனக்கு நன்றாக தெரியும். திரு. அசோக்கின் அபார முயற்சிக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அசோக் குரலை நீங்களூம் தான் கேளூங்களேன் அன்புடன் அவரை வாழ்த்தி உற்ச்சாகப்படுத்துங்கள். -- கோவை ரவி.
கோவை சந்திப்பு நிகழ்ச்சியில் திரு. அசோக் பாடிய கடவுள் வாழ்த்து பாடலை மெய் மறந்து பயபக்தியுடன் கேட்கிறார்கள் திரு. சேஷாத்த்ரி, சென்னை மற்றும் திரு. கோட்டீஸ்வரன், சென்னை.
இதோ... பாடும் போது நான் தென்றல்காற்று - அசோக், சென்னை